[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...

ரபாடா, ஷம்சி மிரட்டல்: 35 ஓவர்களுக்கு சுருண்டது இலங்கை!

srilanka-collapsed-after-rabada-shamsi-attack

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், இலங்கை அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 193 ரன்கள் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த அந்த அணி அடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று தொடங்கியது.

காயத்தில் இருந்து மீண்டு இலங்கை கேப்டன் மேத்யூஸ் அணிக்கு திரும்பியுள்ளார். கேப்டனாக இது அவருக்கு நூறாவது போட்டி. 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு அணியை தயார்படுத்துவதற்கு ஏதுவாக இந்த தொடரில் சில சோதனை முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த தொடரில் பந்து வீசுவதில்லை என்றும் அவர் முடிவு செய்துள்ளார். 

டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், டிக்வெல்லாவும் தாரங்காவும் களமிறங்கினர். முதல் ஒவரின் மூன்றாவது பந்தில் டிக்வெல்லா (2) அவுட் ஆனார். அடுத்து வந்த குசால் மெண்டிஸும் வந்த வேகத்தில் வெளியேறினார். இருவரது விக்கெட்டையும் ரபாடா தூக்கினார். பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த தாரங்காவை அபாரமாக ரன் அவுட் ஆக்கினார் டுமினி. அடுத்து நிகிடி தன் பங்குக்கு அட்டாக்கைத் தொடங்கினார். அவர் வீசிய பவுன்சர் பந்து, மேத்யூஸ் பேட்டில் பட்டு ஸ்லிப்புக்கு பாய்ந்தது. அதை அழகான கேட்சாக மாற்றினார் ஹாசிம் ஆம்லா. 

அடுத்து வந்த சேஹன் ஜெயசூர்யா, எட்டு பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவர் விக்கெட்டையும் ரபாடா அள்ளி னார். அடுத்த வந்த யாரும் நிலைத்து நிற்காமல் விக்கெட்டை பறிகொடுக்க, குசால் பெரேராவும் திசாரா பெரேராவும் நிலைத்து நின்று ஆடினர். குசால் 81 ரன்கள் எடுத்து ஷம்சி பந்துவீச்சில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். திசாரா 49 ரன்கள் எடுத்திருந்தபோது ஷம்சி பந்தில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து அந்த அணி 34.3 ஓவர்களில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளையும் ஷம்சி 4 விக்கெட்டுகளையும் நிகிடி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அடுத்து தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. அந்த அணியின் டி காக்கும் ஆம்லாவும் ஆடி வருகின்றனர். 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close