[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

’இங்கிலாந்து அணியில் ரஷித்தை சேர்த்தது, அபத்தம்’: வலுக்கிறது எதிர்ப்பு!

michael-vaughan-fears-for-county-cricket-after-ridiculous-adil-rashid-recall

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அடில் ரஷித்தை சேர்த்தது அபத்தமானது என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிரப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக, எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடனான பயிற்சிப் போட்டியில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியுடன் மோதும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

அதில் சுழல் பந்துவீச்சாளர், அடில் ரஷித் இடம்பெற்றுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 30 வயதான ரஷித் இதுவரை 10 டெஸ்ட்களில் விளையாடி 38 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கடைசியாக 2016-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்றி ருந்தார். சிவப்பு நிற பந்துகளில் விளையாடுவதைத் தவிர்த்து குறுகிய வடிவிலான போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவதாக அவர் கூறி வந்த நிலையில், திடீரென டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். இது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களை ஆச்சரியப்படுத்தி யுள்ளது.

இதுபற்றி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும்போது, ’ 4 நாள் பயிற்சி போட்டியில் பங்கேற்காத ஒருவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு  தேர்வு செய்துள்ளோம். அவர் சிறப்பாக ஆடுவாரா, இல்லையா என்பதை மறந்துவிடுவோம். ஆனால், இந்த முடிவு அபத்தமானது’ என்று கூறியுள்ளார். ’இது, நூறு சதவிகித உண்மை’ என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேரன் காஃப், ஆதரவு தெரிவித்துள்ளார்.

யார்க்‌ஷயர் கிளப் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஆர்தர் அவரது இணையதளத்தில், ’இந்த தொடரில் சிகப்பு நிறப் பந்தில் கிரிக்கெட் ஆடாத ரஷீத்தைத் தேர்வு செய்ததை அறிந்து ஆச்சரியமானோம். அவரும் இதற்கு ஆர்வம் காட்டவில்லை. இங்கிலாந்துக்கு நாம் என்ன செய்கிறோம் என்று தெரிந்து செய்தால் சரி’ என்று கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close