[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

ரிஷப் பந்த் 'நாட் அவுட்' ! இந்தியா 395 ரன்னுக்கு 'ஆல் அவுட்'

umesh-yadav-strikes-early-after-india-all-out-for-395

இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் அணியுடனான போட்டியில் விராத் கோலி, தினேஷ் கார்த்திக், முரளி விஜய், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரை சதம் எடுத்து அவுட் ஆகினர். இந்நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 395 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிரப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடனான நான்கு நாள் போட்டி நேற்றுத் தொடங்கியது. இது அங்கீகாரமற்ற போட்டி என்பதால் இந்திய அணியில் 18 வீரர்களையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்திய அணி, இந்திய அணி திணறியது. முதல் ஓவரிலேயே இந்திய அணி, தவானின் விக்கெட்டை பறிகொடுத்தது. முதல் பந்திலே அவுட் ஆனார் அவர். ஆட்டத்தின் 3வது ஓவரில் புஜாரா ஒரு ரன்னில் நடையைக் கட்ட, இந்திய அணி 5 ரன்களை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் முரளி விஜய்யுடன், ரஹானே சேர்ந்தார். இருவரும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். ஆனால், இந்தப் போராட்டமும் சிறிது நேரம்தான் நீடித்தது. 17(47) ரன் எடுத்த நிலையில், ரஹானே ஆட்டமிழந்தார்.  அடுத்து முரளி விஜய்யுடன் கேப்டன் விராத் கோலி இணைந்தார்.

கோலியின் ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. 28 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.  நிதானமாக ஆடி வந்த முரளி விஜய் 53 ரன்கள் எடுத்த நிலையில் வால்டர் பந்துவீச்சில் போல்டானார். 

அடுத்து கோலியுடன் இணைந்தார் கே.எல்.ராகுல். இவரும் சிறப்பாக ஆடினர். கோலி 68 ரன்னில் வால்டர் பந்து வீச்சில் சோப்ராவிடமும் ராகுல் 58 ரன்னில் நிஜார் பந்துவீச்சில் டிக்சனிடமும் கேட்ச் கொடுத்து அவுட் ஆயினர். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 82 ரன்களுடனும் ஹர்திக் பாண்ட்யா 33 ரன்களுடன்  இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் நேற்றைய ஸ்கோரோடு வால்டர் பந்தில் ஆட்டமிழந்தார். இதில் பாண்ட்யா மட்டும் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் களமிறக்கப்பட்டார் அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி இறுதியாக 395 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

தனது முதல் இன்னிங்ஸை ஆடி வரும் எஸ்ஸெக்ஸ் அணி 18 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 1 விக்கெட் எடுத்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close