[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பு தொடங்கியது ! இந்தியாவும் பாகிஸ்தானும் விரைவில் மோதல்

asia-cup-2018-schedule-announced-here-s-when-india-will-face-pakistan

ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2018 போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் 2 நாள்களில் 2 ஒரு நாள் ஆட்டங்களில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். 2018 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டி முதலில் இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் சந்தேகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஆசியக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடத்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. எனவே இந்தப் போட்டிகள் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் அபுதாபி, துபாய் நகரங்களில் நடத்தப்படுகிறது. ஆசியக் கோப்பையில் விளையாடுவதற்கு நடப்பு சாம்பியனான  இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்டவை நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

இதில் எஞ்சிய ஒரு இடத்துக்காக  ஹாங்காங், மலேசியா, நேபாளம், ஓமன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள் மோதுகின்றன. இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் நாடும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சூப்பர் 4 ஸ்டேஜ் பிரிவுக்கு முன்னேறும். ஒவ்வொரு அணியும் ஒரு முறை மோதும். இதில் அதிக புள்ளிகளைப் பெறும் முதல் இரண்டு அணிகள் 28-ஆம் தேதி நடக்கவுள்ள இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். இந்திய அணி 18-ஆம் தேதி தேர்வு பெறும் அணியுடனும், மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் 19-ஆம் தேதி மோதுகிறது. 

சூப்பர் 4 பிரிவில் 21-இல் குரூப் ஏ வின்னர்-குரூப் பி ரன்னர் (துபாய்), குரூப் பி வின்னர்-குரூப் ஏ ரன்னர் (அபுதாபி), 23-இல் குரூப் ஏ வின்னர்-குரூப் பி ரன்னர் (துபாய்), குரூப் பி வின்னர்-குரூப் ஏ ரன்னர் (அபுதாபி), 25-இல் குரூப் ஏ வின்னர்-குரூப் பி வினனர் (துபாய்), 26-இல் குரூப் ஏ ரன்னர்-குரூப் பி ரன்னர் (அபுதாபி) ஆட்டங்களும், 28-ஆம் தேதி இறுதி ஆட்டமும் நடைபெறும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close