[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

இந்திய ஏ அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர், பி அணிக்கு பாண்டே கேப்டன்: சஞ்சு சாம்சன் ரிட்டர்ன்!

chahal-picked-for-india-a

இந்திய ஏ கிரிக்கெட் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் பி அணிக்கு மனீஷ் பாண்டேவும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். யோ யோ-வில் தேர்ச்சி பெற்றதையடுத்து சஞ்சு சாம்சன் அணிக்கு திரும்பியுள்ளார்.

தென்னாப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம செய்து இரண்டு, 4 நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதையடுத்து ஆஸ்திரே லிய ஏ அணியும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. மேலும் துலீப் டிராபி போட்டியும் நடக்க இருப்பதால் இதற்கான வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. 

தென்னாப்பிரிக்க ஏ அணியுடன் விளையாடும் இந்திய ஏ அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சேஹல் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் அணியில் அவரைச் சேர்க்கும் பொருட்டு இதில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய பி அணிக்கு மனீஷ் பாண்டே கேப்டன். யோ- யோ தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் இங்கிலாந்து தொடரில் இடம்பெறாமல் போன சஞ்சு சாம்சன், இந்திய பி அணிக்கு திரும்பியுள்ளார்.

வீரர்கள் விவரம் வருமாறு:

இந்திய ஏ அணி: 
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிருத்வி ஷா, ஆர்.சமர்த், மயங்க் அகர்வால், ஈஸ்வரன், ஹனுமா விஹாரி, அங்கித் பாவ்ன், கே.எஸ்.பரத், அக்சர் படேல், நதீம், சேஹல், ஜெய்ந்த் யாதவ், ஆர். குர்பானி, நவ்தீப் சைனி, அங்கித் ராஜ்புத், முகமது சிராஜ்.

ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிருத்வி ஷா, ஆர்.சமர்த், சூர்யகுமார் யாதவ், விஹாரி, நிதீஷ் ராணா, சித்தேஷ் லத், சஞ்சு சாம்சன், மயங்க் மார்கண்டே, கே.கவுதம், குணால் பாண்ட்யா, தீபக் சாஹர், முகமது சிராஜ், சிவம் மவி, கலீல் அகமது.

இதையும் படிங்க: அம்பத்தி ராயுடு மீண்டும் அவுட்!

இந்தியா பி அணி:
மனீஷ் பாண்டே (கேப்டன்), மயங்க் அகர்வால், ஈஸ்வரன், சுபம் கில், தீபக் ஹூடா, ரிக்கி புவி, விஜய் சங்கர், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்ந்த் யாதவ், டி.ஏ.ஜடேஜா, சித்தார்த் கவுல், பிரசித் கிருஷ்ணா, குல்வந்த்,  நவ்தீப் சைனி.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close