[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

'இனி உங்க அணியில் நான் இல்லை' இனவெறி காரணமாக ஓய்வை அறிவித்த வீரர்

mesut-ozil-s-international-retirement-brings-a-new-version-of-political-football

ரஷ்யாவில் 21 ஆவது உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் ஜூலை 15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த உலகக் கோப்பையை பிரான்ஸ் அணி கைப்பற்றியது. மேலும், இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா, பிரேசில், ஸ்பெயின் உள்ளிட்ட ஜாம்பவான் அணிகள் விரைவில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இதில் 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து சாம்பியனான ஜெர்மனி அணி, இம்முறை லீக் சுற்றுடன் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. 2014 உலகக் கோப்பையை ஜெர்மனி வென்ற போது முக்கிய வீரராக இருந்தவர் மெசூட் ஒஸில்.

ஜெர்மன் அணி 2018 ரஷ்ய உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியதற்கு ஒஸிலின் சொதப்பலான ஆட்டமே காரணம் என்று பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜெர்மன் அணி்க்காக இனி விளையாடப்போவதில்லை என்றும், சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் இருந்து தான் விலகப் போவதாகவும் கூறி தனது ஓய்வை அறிவித்துள்ளார் ஒஸில். இந்த முடிவுக்கு அவர் வந்ததற்கான காரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது "தன் மீதான விமர்சனங்களுக்கு நிற வெறியே காரணம்" என தெரிவித்துள்ளார்.

அண்மையில் துருக்கி அதிபர் எர்டோகனுடன் மெசூட் ஒசில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனால் பலரும் ஒசிலை, ஜெர்மன் மீது இவருக்கு தேசப்பற்று இல்லை, துருக்கியே முக்கியம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மெசுட் ஒசிலின் பெற்றோர்கள் துருக்கியர்கள் என்பதால் அந்நாட்டு ரசிகர்கள் இவர் மீது விமர்சனங்களை முன் வைத்தனர். இந்நிலையில் ஒஸில் ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட அரிக்கையை வெளியிட்டு இருந்தார்.

அதில் ‘அண்மை சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தது. எனக்கு மன பாரத்தை அதிகரிக்க செய்தது. எனவேதான் ஜெர்மனி அணிக்காக இனி விளையாடுவதில்லை என முடிவு செய்தேன்.  நான் இனவாதம் மற்றும் அவமதிப்புக்கு ஆளாவதாக உணர்கிறேன். நான் அளவிளாத பெருமை மற்றும் உற்சாகத்துடனேயே ஜெர்மனி சட்டையை அணிந்தேன், இப்போது எனக்கு அதனை அணிய தோன்றவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதில் உச்சகட்டமாக ஜெர்மனி கால்பந்து சங்கத்திலும் ஒஸிலுக்கு ஆதரவு இல்லாமல் போனதுதான் காரணம், இதற்கு ஒஸில் " போட்டியில் வென்றால் நான் ஜெர்மானியன் தோற்றால் நான் புலம்பெயர்ந்தவன்” என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று வேதனைப்பட்டார். மேலும் "எனக்கு 2 இருதயங்கள், ஒன்று ஜெர்மனி இன்னொன்று துருக்கி” என்றும் அவர் கூறியுள்ளார்.

இவர் ஜெர்மனியின் நிறவெறியைக் காரணம் காட்டி அந்த அணிக்கு ஆடமாட்டேன் என்று கூறியதையடுத்து துருக்கி நீதியமைச்சர் அப்துல்ஹமித் குல், “மெசூட் ஓஸில் முடிவை நான் வரவேற்கிறேன், பாசிசம் எனும் வைரஸுக்கு எதிராக அவர் அடித்த இந்த கோல் பாராட்டப்பட வேண்டியது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close