[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

“குல்தீப் அதுக்கு சரிபட்டு வருவார்” - டெண்டுல்கரின் கணிப்பு

sachin-tendulkar-said-about-kuldeep-yadav

‘சைனா மேன்’ என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். 23 வயது நிரம்பிய இளம் வீரரான குல்தீப், அதற்குள் தனக்கென்ற ஒரு இடத்தை அணியில் பிடித்துவிட்டார். கிரிக்கெட் உலகில் வேகமாக வளர்ந்து வரும் இவர், சர்வதேச போட்டிகளில் இதுவரை 2 டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதவிர 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 48 விக்கெட்டுகளை குவித்துள்ளார். ஒருமுறை 5 விக்கெட்டுகளை ஒரே போட்டியில் கைப்பற்றினார். டி20 போட்டிகளை பொறுத்தவரை 12 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவர் சர்வதேச ஒருநாள் போட்டி தரவரிசையில் 6ஆம் இடத்தில் உள்ளார்.

இதற்கிடையே 31 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 35 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் இந்தியா விளையாடிய டி20 தொடரில், இந்திய அணி கோப்பையை வெல்ல குல்தீப் பந்துவீச்சும் முக்கிய காரணம். குல்தீப்பின் இந்தத் திறமையான பந்துவீச்சால், அவருக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணி வீரர்கள் பட்டியலில் குல்தீப் இடம்பெற்றுள்ளார். 

இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், “குல்தீப் யாதவ் நீண்ட நெடிய கிரிக்கெட் பயணத்திற்கு தயாராகிவிட்டார். இது மிகவும் சவாலான தொடராக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு அவர் சரிப்பட்டு வருவார். அவரது திறமையால் அவர் கண்டிப்பாக அதில் விளையாட தகுதி பெற்றுள்ளார். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த முறை இங்கிலாந்து சுற்றுப்பயணம் சற்று சூடான தருணமாக உள்ளது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் இன்னும் சற்று திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுக்கலாம்” என்று கூறியுள்ளார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close