[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

ரிஷப் பன்ட்டின் வேற லெவல் பேட்டிங்: புகழ்கிறார் இந்திய ’சுவர்’!

pant-has-shown-he-can-bat-differently-in-longer-formats-dravid

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பன்ட் சாதிப்பார் என்று இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது விராத் கோலி தலைமையிலான இந்திய அணி. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் போட்டி தொடரை இங்கிலாந்திடம் இழந்தது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய ஏ அணியில் இடம் பெற்றுள்ள ரிஷப், இங்கிலாந்தில் நடந்த, வெஸ்ட் இண்டீஸ் ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான முத்தரப்பு தொடரிலும் அங்கீகாரமில்லாத டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடியதை அடுத்து அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், இப்போது இந்திய ஏ அணி பயிற்சி யாளராக இருக்கிறார். இந்திய அணியின் சுவர் எனப் போற்றப்படும் அவருக்கு, இரண்டு அணிகளிலும் ரிஷப்பின் பேட்டிங்கை மேம்படுத்திய சிறப்பு உண்டு.

இந்நிலையில் தேசிய அணியில் ரிஷப் இடம்பெற்றிருப்பது பற்றி ராகுல் டிராவிட் கூறும்போது, ‘ரிஷப் வித்தியாசமாக பேட்டிங் செய்வதில் சிறப்பானவர். அதுபோன்று விளையாடும் திறமை அவரிடம் இருக்கிறது. அது வேற லெவல். அவர் எப்போதும் அட்டாகிங் பேட்ஸ்மேன்தான். நிலைமையை கணித்து விளையாடுபவர். அவரை டெஸ்ட் அணியில் சேர்த்ததில் மகிழ்ச்சி. அவரது முதிர்ச்சியான ஆட்டம் அணிக்கு கை கொடுக்கும் என்று நம்புகிறேன். இங்கிலாந்தில் நடந்த அங்கீகாரமில்லாத டெஸ்ட் போட்டியில் அவர் நிலைத்து நின்று அருமையான ஆட்டத் தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜெயந்த் யாதவுடன் அவர் இணைந்து எடுத்த 100 ரன்  பார்ட்னர் ஷிப் அபாரம். முத்த ரப்பு ஒரு நாள் தொடரின் கடைசிப் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அவர், அவுட் ஆகாமல் எடுத்த 64 ரன்களும் முக்கியமானது.

அவர் எப்படி விளையாடுவார் என்பது எல்லோரும் தெரியும். ஐபிஎல் தொடரில் அதிரடியாகவே  செயல்பட்டார்.  கடந்த ரஞ்சி தொடரில், அதிரடியான ஆட்டம் மூலம் 900 க்கும் அதிகமான ரன்களை எடுத்தார். அதனால் அவர் கண்டிப்பாக சாதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக் கிறது.

இந்திய ஏ அணி அதிகமாக சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது, இந்திய அணிக்கும் நல்லது. நன்றாக விளையாடினால் தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்ற எண்ணம் வீரர்களுக்கு ஏற்படும். அது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வீரர்களை ஊக்கப்படுத்தவும் செய்யும்’ என் றார். 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close