[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

இரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்

pakistans-fakhar-zaman-imam-ul-haq-break-all-time-opening-partnership-record-in-odis

சர்வதேச அளவில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் என்ற சாதனையை பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக், பகர் ஜமான் ஜோடி படைத்துள்ளது. இதில், பகர் ஜமான் இரட்டை சதமும், இமாம்-உல்-ஹக் சதமும் விளாசினர். ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் புலவாயோவில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் அவர்கள் இந்தச் சாதனையை படைத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

தொடக்கத்தில் இந்த ஜோடி நிதானமாகத் தான் விளையாடினர். முதல் 10 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.18 ஓவரில் 100 ரன்களும், 24.4 ஓவரில் 150 ரன்களும் எடுக்கப்பட்டது. ஜமான் 51 பந்துகளிலும், இமாம் 69 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். பின்னர் சற்றே அடித்து விளையாட தொடங்கினர். 31.4 ஓவரில் 200 ரன்களை பாகிஸ்தான் எட்டியது. பகர் ஜமான் 92 பந்துகளில் சதம் அடித்தார். பின்னர், இமாம் உல் ஹாக் 112 பந்துகளில் சதம் அடித்தார். பின்னர் 41.4 ஓவரில் பாகிஸ்தான் 300 ரன்களை எட்டியது. 

   

பாகிஸ்தான் 304 ரன்கள் எடுத்திருந்த போது, இமாம் உல் ஹாக் 122 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், பகர் ஜமான் உடன் அசிப் அலி ஜோடி சேர்ந்தார். அசிப் அலி சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசினார். அவருடன் ஜமானும் அதிரடி காட்டினார். இதனால், ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 46.1 ஓவரிலேயே பாகிஸ்தான் 350 ரன்களை தொட்டது. 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 399 ரன் எடுத்தது. பகர் ஜமான் 156 பந்துகளில் 210 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அசிப் அலி 22 பந்துகளில் 50 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். 

                       

இந்தப் போட்டியில் இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஜோடி 304 ரன்கள் குவித்ததே சர்வதேச அளவில் அதிகமானதாகும். இதற்கு முன்பாக இலங்கையின் தரங்கா ஜெயசூர்யா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 286 ரன் எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. அந்தச் சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை முதல் விக்கெட்டுக்கு சச்சின் - கங்குலி ஜோடி 258 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாகும். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கெயில்-சாமுவேல்ஸ் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு அடித்த 372 ரன்களே அதிகமான பார்ட்னர்ஷிப் ரன்கள் ஆகும். அதற்கு அடுத்து, சச்சின் டிராவிட் ஜோடி குவித்த 331 ரன்கள் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

                       

அதேபோல், பாகிஸ்தானைப் பொறுத்தவரை பகர் ஜமான் முதல் வீரராக இரட்டை சதம் அடித்துள்ளார். அந்த அணியில் சையித் அன்வர் அடித்த 194 ரன்களே இதுவரை அதிகபட்சமாக இருந்து வந்தது. அதேபோல் உலக அளவில், 6வது வீரராக அவர் இரட்டை சதம் அடித்துள்ளார்.

                 

இந்திய அணியில் சச்சின், சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கெயில், நியூசிலாந்தின் கப்தில் இரட்டை சதம் அடித்துள்ளனர். இதுவரை 9 இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

                         

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close