[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

“அந்த முடிவை எடுத்துவிடாதீர்கள் மெஸ்சி” - உருகும் அர்ஜென்டினா வீரர்

lionel-messi-is-the-soul-of-argentina-and-we-need-him-happy-says-carlos-tevez

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறிய அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி மீண்டும் ஒய்வு பெறுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு 2014ம் ஆண்டு உலகக் கோப்பையின் போதும் மெஸ்சி ஓய்வு அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணியிடம் தோல்வி அடைந்து ரன்னர் அப் ஆனது. பின்னர், பலரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடினார்.

மெஸ்சி தனது மேஜிக்கால் பலமுறை அர்ஜென்டினா அணிக்கு வெற்றியை ஈட்டி தந்துள்ளார். அர்ஜெண்டினா அணி இந்த முறை உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப்பெற்றதும் மெஸ்சியின் மேஜிக்கால்தான். தகுதிச் சுற்றின் கடைசிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து, அர்ஜென்டினாவை உலக்கோப்பை தொடருக்கு அழைத்து வந்தார் என்பதை மறந்து விடக்கூடாது. அதுபோன்ற ஒரு ஆட்டத்தைதான் மெஸ்சியிடம் அவரது ரசிகர்கள் எதிர்த்தார்கள். 

                           

ஆனால், இந்த உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா மட்டுமல்ல மெஸ்சியின் ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும்தான். லீக் தொடரில் அர்ஜெண்டினா அணி தனது முதல் போட்டியில் ஐஸ்லாந்திற்கு எதிராக 1-1 என டிரா செய்தது. அதுவே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தப்போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்சி வீணடித்தது ரசிகர்களை கடுப்பேற்றியது.

ஆனால், குரேஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா படுதோல்வி அடைந்ததை தான் ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அப்போது, மெஸ்சிக்கு எதிரான இணையத்தில் கால்பந்து ரசிகர்கள் பொங்கிவிட்டார்கள். பின்னர் நைஜீரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற ரசிகர்களுக்கு சற்றே நம்பிக்கை பிறந்தது. ஆனால், காலிறுதிக்கு கூட முன்னேறாமல் பிரான்ஸ் அணியிடம் ரவுண்ட் 16-ல் தோல்வியை தழுவி அர்ஜென்டினா வெளியேறியது.

                                     

உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான அர்ஜென்டினா காலிறுதி சுற்றுக்கு கூட முன்னேறாதது ரசிகர்களுக்கு அவ்வளவு ஏமாற்றத்தை அளித்தது. மெஸ்சியின் ஆட்டத்தை இனி பார்க்க முடியாதா அவர்கள் வேதனையும் கோபமும் அடைந்தனர்.

உலகக்கோப்பை தோல்வியை அடுத்து மெஸ்சி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட போவதாக செய்திகள் வலம் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அர்ஜென்டினா அணிக்காக விளையாட வேண்டாம் என்ற முடிவை எடுக்கக் கூடாது என்று அந்த அணியின் வீரர் கார்லஸ் தேவிஸ் கூறியுள்ளார்.

                    

கார்லஸ் கூறுகையில், “மெஸ்சி தன்னை குறித்து அவரே யோசிக்க வேண்டும். அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய நேரங்களை நாங்கள் நிறைய வீணடித்துவிட்டோம். குறிக்கோள்களை எட்ட அவருக்கு உதவ தவறிவிட்டோம். 

ஒரு வீரராகவும், ஒரு அர்ஜென்டினனாகவும் மெஸ்சி எங்களுக்கு வேண்டும் என்பதைதான் அவரிடம் சொல்கிறேன். அவர் ஓய்வு எடுக்க விரும்புகிறார். ஆனால், அவர் எங்களுக்கு வேண்டும். ஏனெனில் மெஸ்சி அர்ஜென்டினாவின் ஆன்மா. எவ்வளவு நாள் அவர் கால்பந்து விளையாட நினைக்கிறாரோ அதுவரை விளையாடலாம். 

அவர் அர்ஜென்டினாவின் மிகப்பெரிய அடையாளம். அவர் தனக்கானப் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

                               

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close