[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பழைய மாதிரி இல்லையே: தோனியை தாக்கும் கவுதம் காம்பீர்!

gautam-gambhir-s-stinging-comment-for-ms-dhoni

மெதுவாக ஆடுவதன் மூலம் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு, தோனி நெருக்கடியை கொடுக்கிறார் என்று கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், தோனி 2 வது போட்டியில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசிப்போட்டியில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். தோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. 

இந்நிலையில் அவரது ஆட்டம் பற்றி, இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கும் கவுதம் காம்பீர் கூறும்போது,  ’தோனி, களத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அதிகமான டாட் பந்துகளை சந்திக்கிறார். சில பந்துகளை அடிப்பதில் தடுமாற்றம் தெரிகிறது. தோனி இப்படி ஆடுவது, பின்னால் வருகிற பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தையே கொடுக்கும்.

அவர் பந்துகளை வீணடிக்காமல், வேகமாக ஆட வேண்டும். தோனியின் மெதுவான ஆட்டத்தால் இங்கிலாந்தின் ரஷித், மொயின் அலி ஆகிய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை சாய்த்துவிட்டனர். கடந்த சில வருடங்களுக்கு முன் தோனி, இப்படி பந்துகளை வீணடிக்க மாட்டார். இப்போதும் அப்படி ஆக்ரோஷமான ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்த வேண்டும்’ என்றார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் கடந்த ஒருவருடமாக தோனி போதுமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தவில்லை என்று குறை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close