[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

விராத் கோலி பற்றி அப்படியா சொன்னேன்? ஆஸி.வீரர் திடீர் பல்டி!

australia-s-pat-cummins-clarifies-virat-kohli-comment-as-wishful-thinking

ஆஸ்திரேலியா வரும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலியை ஒரு சதம் கூட அடிக்கவிடாமல் பார்த்துக்கொள்வோம் என்று கூறிய ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் இப்போது அது பற்றி விளக்கமளித்துள்ளார்.
 
இந்திய அணி, இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கி ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி, அங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ், ’ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் விளையாட வரும் இந்திய அணியை வீழ்த்துவோம். அந்த அணியின் கேப்டன் விராத் கோலியை ஒரு சதம் அடிக்கவிடாமல் பார்த்துக்கொள்வோம்’ என்று தெரிவித்திருந்தார்' 

ஆஸ்திரேலிய மண்ணில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராத் கோலி 62 ரன்கள் சராசரி வைத்துள்ளார். அங்கு 5 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது என்று கூறியிருக்கிறார் பேட் கம்மின்ஸ்.

‘இந்திய அணிக்கு கோலி முக்கியமான வீரர். அவர் அதிகமாக ரன்கள் குவித்தால் நாங்கள் வெற்றி பெற சிரமமாக இருக்கும். அதனால் அவரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. இதை நான் அவரைப் பெருமைப்படுத்தும் விதமாகவே சொன்னேன். அவர் சிறந்த பேட்ஸ்மேன் இல்லை என்றோ வேறு தவறான அர்த்தத்திலோ சொல்லவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close