[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

ஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..!

virat-kohli-touches-career-high-911-points-sixth-best-ever-in-odi-rankings

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  ஒருநாள் கிரிக்கெட்டிற்கான ஐசிசியின் பேட்ஸ்மேன்கள் தரநிலை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இதனால், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் மூன்றாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 911 புள்ளிகளுடன் பேட்ஸ்மேன்களுக்கான தரநிலைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 911 புள்ளிகள் என்பது விராட் கோலியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வரலாற்றில் முதல்முறையாக பெறும் அதிகப்பட்ச புள்ளியாகும். இங்கிலாந்து எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி முறையே 75, 45, 71 ரன்கள் குவித்திருந்தார். இதனால் அவருக்கு 2 புள்ளிகள் அதிகமாக கிடைத்துள்ளது. அதன்மூலம் 911 புள்ளிகளை எட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ், 1991 மார்ச்சில் 918 புள்ளிகள் பெற்றிருந்தார். இதுவே ஒருநாள் போட்டிக்கான அதிகப்பட்ச புள்ளி ஆகும்.

அதேசமயம் இடது கை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், தனது கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐசிசியின் பந்துவீச்சாளருக்கான தரவரிசைப் பட்டியலில் அவர் இந்த இடத்தை பிடித்துள்ளார். இவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதேபோல நடந்து முடிந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 34 புள்ளிகள் அதிகம் பெற்று  பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரநிலைப் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் முறையே 3, 113 (அவுட் இல்லை), 100 (அவுட் இல்லை) ரன்கள் அடித்திருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close