[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

நாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் !

success-of-french-football-team-masks-underlying-tensions-over-race-and-class

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை காலபந்து தொடரை வென்று அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது பிரான்ஸ் அணி. பிஃபா உலகக் கோப்பையை இரண்டாவது முறையை வென்றதன் மூலம் பிரான்ஸ் திறமைக்கு பஞ்சமில்லாத அணி என நிரூபித்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு வெல்லும் அணியாகக் பிரான்ஸ் இருக்கக் கூடும் என எந்த ஊடகங்களும் கணிக்கவில்லை. எல்லோரும் அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுகல், உருகுவே, இங்கிலாந்து, ஸ்பெயின் அல்லது பெல்ஜியம் அணிகள் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கையில் பிரான்ஸ் வெற்றிப் பெற்று விமர்சகர்கள் வாயை அடைத்தது.

ஆனால் மனிதர்களின் குணமே இப்படிதானே, பிரான்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் அந்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் இல்லை. பல முக்கிய வீரர்கள் பிரான்ஸில் குடியேறியவர்கள், பல நாட்டைச் சேர்ந்தவர்களை அணியில் வைத்துக்கொண்டு பிரான்ஸ் என்ற பெயர் வைத்த அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த விமர்சனம் உண்மைதான், பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் பலர் அந்நாட்டை தாய் நாடாக கொண்டவர்கள் இல்லை. பலரும் பிரான்ஸில் குடியேறியவர்கள்தான். இதுபோன்ற விஷயங்கள் பிரான்ஸ்க்கும் கால்பந்துக்கும் புதிததல்ல. கிரிக்கெட்டில் கூட தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளில் இதுபோன்று வீரர்கள் விளையாடி வருகிறார்கள். ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பொருளாதாரத்துக்காகவும், நல்ல வாழ்க்கை தரத்துக்காகவும், ஐரோப்பிய நாடுகளில்  குடியேறுவது வழக்கம். ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரியா, இத்தாலி உள்பட பல்வேறு நாடுகளில் குடியேறியவர்கள் அதிகம் உள்ளனர்.

பல்லாண்டு காலமாக அந்தந்த நாடுகளில் வசிக்கும் அவர்கள் கால்பந்தை தங்கள் உயிரின் ஓர் அங்கமாக நினைத்து அங்குள்ள பள்ளி, பல்கலைக்கழகம், கிளப்புகள், லீக் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி பிரான்ஸ் போன்ற தேசிய அணியில் இடம் பிடிக்கின்றனர். பிரான்ஸின் மாப்பே, போக்பா, கிரைஸ்மேன் ஆகியோர் முறையே பப்புவா நியூகினியா, ஜெர்மனி, கேமரூன் நாடுகளில் இருந்து வந்து பிரான்ஸில் குடியேறியவர்கள்.

பிரஞ்சு குடியுரிமை பெற்று காலம்காலமாக வசித்து வருகின்றனர். பிரான்ஸை தாய்நாட்டை போலவே நினைத்து வாழ்ந்து வருகின்றனர். எனவே கால்பந்து வெற்றிக் குறித்து அவர்கள் மீதான "நீங்க வேற நாட்டுக்காரங்க" என்ற விமர்சனம் பெரும் மனக் காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  பிரான்ஸ் அணியில் மூன்றில் இரண்டு பங்கு வீரர்கள் குடியேறியவர்கள் சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி ஆட்டத்தில் கிரைஸ்மேன் ப்ரீ கிக் மூலம் அடித்த பந்தில் குரோஷிய வீரர் மண்ட்ஸுகிக் சேம் சைட் கோலடித்தார். பின்னர் பெனால்டி வாய்ப்பு மூலம் கிரைஸ்மேன் கோலடித்தார். பின்னர் போக்பா, மாப்பே ஆகியோர் கோலடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். அதே போல் மற்றொரு மீட்பீல்டரான பிளேயிஸ் மட்டெளடி பெற்றோர் அங்கோலா மற்றும் காங்கோவில் இருந்து வந்து குடியேறினர்.

கடந்த 1998-இல் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய ஜினடின் ஜிடேன் பெற்றோர் அல்ஜீரியாவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமர்சனங்கள் குறித்து பதிலளித்த கிரைஸ்மேன் "நாங்கள் எல்லோரும் ஒரே சீருடை அணிந்து விளையாடுகிறோம், எங்கள் நாடு பிரான்ஸ்" என தெரிவித்துள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close