[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

இனி எல்லாம் லூகா மோட்ரிச் ! 'கோல்டன் பால்' விருதை வென்றார்

croatia-s-luka-modric-wins-golden-ball-for-player-of-the-2018-world-cup

ரஷ்யாவில் 21 ஆவது பிஃபா கால்பந்தாட்டப் போட்டிகள் எனும் கொண்டாட்டம் ஒரு வழியாக முடிவடைந்தது. இந்த உலகக் கோப்பையை பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி கைபற்றியது. ஜூன் 14 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பையில் உலகப் புகழ்பெற்ற வீரர்கள் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் விரைவில் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டனர். இதனால் இந்தாண்டு உலகக் கோப்பை போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு கொடுக்கப்படும் மிகவும் உயரிய விருதான் "கோல்டன் பால்" விருது யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது.

ஆனால் இந்தாண்டுக்கான "கோல்டன் பால்" விருதை வென்றார் குரோஷியாவின் லூகா மோட்ரிச். குரோஷியாவின் வெற்றிக்கு ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக பங்காற்றிய அவர், மிகவும் திறமையான வீரராக பிஃபா தொழில்நுட்ப குழுவினரால் அறியப்பட்டுள்ளார். உலகக் கோப்பைப் போட்டிகளில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுவது "கோல்டன் பால்" விருது. இது உலகக் கோப்பை தொடரின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் விருதாகும். 

இவ்விருதினை பிஃபா அமைப்பின் தொழிநுட்ப குழுவினரால் வீரர்களின் திறன், திறமை, கோல் அடிக்கும் லாவகம் பின்பு சர்வதேச ஊடகங்களின் வாக்குகளின் அடிப்படையில் வீரர் தேர்வு செய்யப்படுவார்கள்.  மேலும் தொடரில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கும் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பந்துகளும் வழங்கப்படுகிறது.

முதலாவது உலகக் கோப்பை போட்டியில் முதல் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட போதும், விருதுகள் வழங்கப்படவில்லை. பின்பு, இந்த விருது 1982 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது வரை நடைமுறையில் உள்ளது. பிரேசிலில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இவ்விருது அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.

இப்போது கோல்டன் பாலை லூகா மோட்ரிச் கைபற்றியுள்ளார். ஆனால், இந்த விருது பெல்ஜியத்தின் ஈடன் ஹஸார்டுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வெள்ளிப் பந்து விருதும், பிரான்ஸ் அணியின் ஆண்டோன் கிரீஸ்மேனுக்கு வெண்கல பந்து விருதும் வழங்கப்பட்டது. கோல்டன் பால் விருதை வென்றதன் மூலம் கால்பந்தாட்ட உலகில் மெஸ்ஸி, ரொனால்டோ வரிசையில் லூகா ஒரு புதிய கதாநாயகனாக உருவெடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close