[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

சதம் அடித்து அசத்திய ரூட்: சவாலான இலக்கை எட்டுமா கோலி டீம் ?

root-ton-willey-blitz-powers-england-to-322

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 323 ரன்களை இங்கிலாந்து இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருந்தபோது பேர்ஸ்டோ 38 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் ஒருசில ஓவர்களிலே ஜேசன் ராய்யும் 40 ரன்களில் வெளியேற அதன்பின் கேப்டன் மோர்கன், ரூட்டுடன் இணைந்தார். இந்திய பந்து வீச்சை சாதுர்யமாக எதிர்கொண்ட இந்த ஜோடி நீண்ட நேரம் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. குல்தீப் யாதவ் வீசிய 30-வது ஓவரின் மூன்றாவது பந்தில் சிறப்பாக விளையாடி வந்த மோர்கன் தாவனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 51 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த மோர்கன், அதில் 4 பவுண்டரிகளும் 1 சிக்ஸர்களும் அடங்கும். 

 

கடந்த போட்டியில் நிதானமாக விளையாடி ரன் சேர்த்த பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜோஸ் பட்லரும் 4 ரன்களில் ஏமாற்றினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். 300 ரன்களுக்குள் இங்கிலாந்து அணியை கட்டுபடுத்திவிடலாம் என ரசிகர்கள் நினைத்த  நிலையில் 8-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டேவிட் வில்லி கடைசி கட்டத்தில் அதிரடியில் மிரட்டினார். 31 பந்துகளை சந்தித்த அவர் அரைசதம் கண்டு அசத்தினார்.

இறுதியில் 50 ஒவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்த இங்கிலாந்து அணி 322 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத ரூட் 116 பந்துகளில் 133 ரன்கள் குவித்தார். அதில் 8 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து 323 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close