[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

“மற்ற ஸ்பின்னர்களிடம் இல்லாத ஒன்றை குல்தீப்பிடம் பார்த்தேன்” - மிரண்டு போன மார்கன்

england-captain-eion-morgan-said-about-kuldeep-yadav

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ட்ரெண்ட் பிரிஜிட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 268 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பட்லர் 53 (51), ஸ்டோக்ஸ் 50 (103), ராய் 38 (35) மற்றும் ஜானி 38 (35) ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன் சேர்க்கவில்லை. இந்திய அணி தரப்பில் பந்துவீசிய குல்தீப் யாதவ் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவர் வீசிய 10 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தப் பந்துவீச்சு இங்கிலாந்தின் பேட்டிங்கை நிலை குலையச் செய்தது. 

இதையடுத்து விளையாடிய இந்திய அணி 40.1 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா 137 (114) ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். கேட்பன் கோலி 75 (82), ஷிகர் தவான் 40 (27) ரன்கள் சேர்த்தனர். 6 விக்கெட் வீழ்த்திய சுழல் நாயகன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பேசிய குல்தீப், “எனக்கு இது ஒரு முக்கிய நாள். நான் தொடக்கத்தில் சில ஓவர்கள் சிறப்பாக பந்துவீசினேன். அதிர்ஷ்டவசமாக முதல் இரண்டு ஓவர்களில் எனக்கு விக்கெட் கிடைத்தது. அடுத்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடினமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது எனக்கு தெரியும்” என்றார்.

இங்கிலாந்து கேப்டன் மார்கன் பேசும்போது,  “இது எங்களுக்கு ஒரு சிறப்பான நாள் இல்லை. இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. குல்தீப்பிற்கு இது ஒரு மிகச்சிறந்த நாள். இந்தியாவிற்கு எதிராக விளையாடுவது சவாலானதாக உள்ளது. இருந்தாலும் நாங்கள் எங்கள் ஆட்டத்தை இனி மேலும் சிறப்பாக வெளிக்காட்டுவோம். இந்தப் போட்டியின் மூலம் நான் ஒன்றை கற்றுக்கொண்டேன். இதுவரை விளையாடிய போட்டிகளில், மைதானம்தான் ஆட்டத்தின் மாற்றத்தை முடிவு செய்தது. ஆனால் இந்தப் போட்டியில் நிறைய திட்டங்களை நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் மற்ற ஸ்பின்னர்களிடம் இல்லாத ஒன்றை குல்தீப் பந்துவீச்சில் பார்த்தேன். அவர் திடீரென ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். நாங்கள், எங்கள் தரப்பில் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும்” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close