[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி

இலங்கை டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்!

sri-lanka-spin-trio-imposes-early-on-second-day

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது போட்டி காலேவில் நேற்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி இலங்கை வீரர்கள் களமிறங்கினர். அந்த அணியின் கருணா ரத்னே மட்டும் நிலைத்து நின்று 158 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்காததால் 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

தென்னாப்பிரிக்கத் தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளையும் ஷம்சி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். காயத்தில் இருந்து மீண்டு நீண்ட இடை வெளிக்குப் பின் அணியில் இணைந்திருக்கிற ஸ்டெயின் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. சுழல்பந்துவீச்சுக்கு எதிராக அந்த அணி வீரர்கள் திண்டாடினர். கேப்டன் டுபிளிசிஸ் மட்டும் போராடி 49 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 54.3 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது தென்னாப்பிரிக்கா. 

இலங்கை தரப்பில் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளையும் லக்மல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close