[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

‘எங்களுக்கு கோப்பை இல்லையா..?’ செய்தியாளர் முகத்தில் பீரை ஊற்றிய இங்கிலாந்து ரசிகர்

world-cup-fan-throws-beer-in-face-of-tv-journalist-reporting-on-england-v-croatia-semi-final

குரேஷியா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குரேஷிய கால்பந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மிதந்திருக்க, இங்கிலாந்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். 

மிகவும் அதிகப்படியான நம்பிக்கையுடன் நேற்றைய அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. களத்தில் விளையாடிய வீரர்களை காட்டிலும், வெளியே போட்டியை பார்த்த ரசிகர்கள் தான் அதிக நம்பிக்கையுடன் இருந்தார்கள். கிரிக்கெட் போட்டியில் ஒரு உலகக் கோப்பை தொடரின் போது கம் ஆன் இந்தியா என்ற வாசகம் மிகவும் பிரபலமாக இருந்தது. அதேபோல், உலகக் கோப்பை இங்கிலாந்து நாட்டிற்கு வருகிறது என்று உற்சாகத்தில், 'coming to home' என்ற வாசகத்தை இங்கிலாந்து ரசிகர்கள் பிரபலம் ஆக்கினார்கள். 

                                    

இதே உற்சாகத்தில், தலைநகர் லண்டன் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத திரையில், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டியை கண்டு ரசித்தனர். சில இடங்களில் சுமார் 30 ஆயிரம் ரசிகர்கள் ஒன்றாக ஒரே இடத்தில் போட்டியை பார்த்தார்கள்.

         

ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்திலேயே இங்கிலாந்து அணி கோல் அடிக்க, அவர்கள் உற்சாகம் அடைந்தனர். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர், இங்கிலாந்து அணி கோல் அடிக்காத போது குரோஷியா அணியும் கோல் அடிக்காததால் ரசிகர்கள் மகிழ்ச்சி 68வது நிமிடம் வரை நீடித்தது. ஆனால் 68 ஆவது நிமிடத்தில் குரேஷிய அணி கோல் சமன் செய்தது.

இருந்தாலும், இங்கிலாந்து அணி கோல் அடித்து விடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தனர். கூடியிருந்த அத்தனை பேரும் பிரார்த்தனை செய்ய தொடங்கினார்கள். எல்லோர் முகத்திலும் ஒரே பதட்டம். கண்களை சிமிட்டி சிமிட்டி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

                        

ஆனால் கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதியில் குரேஷிய அணி வெற்றிக்கான கோலை அடித்தது. அவ்வளவு தான் இங்கிலாந்து ரசிகர்கள் முகம் அப்படியே வாடிப் போனது. எல்லோரும் சில நிமிடங்கள் திகைத்து நின்றார்கள்.

போட்டிக்கு பின் சோகம் இழையோடும் முகத்துடன் இங்கிலாந்து ரசிகர்கள் வீடு திரும்பினர்.

கோப்பை வீட்டிற்கு வரும் என்று கூறி வந்தவர்கள், தங்களது அணி நாட்டிற்கு திரும்புகிறது என்று கடுப்பில் ட்ரோல் செய்கிறார்கள். 

                             

இது ஒருபுறம் இருக்க, ஒரு மால் ஒன்றில் இங்கிலாந்து ரசிகர்கள் போட்டியை பார்த்து வந்தார்கள். அங்கு நியூசிலாந்து நாட்டு செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் அதனை நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்.

இங்கிலாந்து தோல்வியை தழுவ அந்நாட்டு ரசிகர்களின் மனநிலையைப் பற்றி நேரலையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செய்தியாளரை நோக்கி கோபமாக வந்த இங்கிலாந்து ரசிகர் ஒருவர் தன் கைகளில் கிளாசில் இருந்த பீரை அவர் மீது ஊற்றினார். செய்தியாளர் இதனை எதிர்பார்க்கவேயில்லை. இருப்பினும், அதனை துடைத்துக் கொண்டு தொடர்ந்து நேரலையில் பேசினார்.

போட்டோ கேலரி

1 of 29

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close