[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

குரோஷியாவை வீழ்த்துமா இங்கிலாந்து ?

croatia-v-england-maybe-just-maybe-this-time-it-will-be-different

இங்கிலாந்து - குரோஷியா இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்கெனவே பிரான்ஸ் அணி பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில் இந்தப் போட்டி மாஸ்கோவில் உள்ள லூசினிகி ஸ்டேடியத்தில் ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையே நடைபெறவுள்ளது.

பிஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 32 நாடுகளின் அணிகள் லீக் போட்டிகளில் பங்கேற்றன. அதிலிருந்து 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. பின்பு, அதிலிருந்து 8 அணிகள் காலிறுதிப் போட்டியில் பங்கேற்றன. இப்போது நான்கு  அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றன. அரையிறுதியில் வெற்றிப்பெறும் இரு அணிகள் இதில் ஜூலை 15 ஆம் தேதி நடைபெவுள்ள இறுதிப் போட்டியில் மோதும்.

இங்கிலாந்து அணியில் ஒரு காலத்தில் பெக்காம், ரூணி போன்ற ஜாம்பவான் வீரர்கள் இருந்தனர். அப்போதெல்லாம் அந்த அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடிந்ததில்லை. கடைசியாக 1966 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அதன் பின்னர் சோபிக்கவில்லை. 1990 ஆம் ஆண்டு ஓரே முறை அரையிறுதிக்கு முன்னேறி மேற்கு ஜெர்மனியிடம் தோல்வியைத் தழுவியது.

இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன் (6 கோல்), ஹாரி மேக்குயர், டெலி அலி, ஜோர்டான் ஹென்டர்சன், லிங்கார்ட் உள்ளிட்டோர் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றனர். குரோஷியா அணி உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது முறை அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. கடைசியாக 1998 உலக்க கோப்பை அரையிறுதியில் பிரான்ஸிடம் தோற்று 3-ஆம் இடத்தை  பெற்றது.

எனவே இம்முறை எப்படியேனும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட வேண்டும் என்ற வேட்கையுடன் களம் காண்கிறது. குரோஷிய அணியில் மொட்ரிக், மண்டுஸூகிக்  இருக்கின்றனர். முக்கியமாக கோல் கீப்பர் சுபாஸிக் இருக்கிறார், இவரை தாண்டி பந்து கோல் போஸ்ட்டுக்குள் செல்வது சிரமம். ஆனால் அவர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்பது சிரமம் எனக் கூறப்படுகிறது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close