2003-04 ஆம் ஆண்டுகளில் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமானவர் இர்பான் பதான். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது ஜம்மு-காஷ்மீர் அணி சார்பில் உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளார்.
பதான் அளித்த பேட்டியில், இந்திய அணியின் கேப்டன்கள் குறித்து பேசினார். பதான் கூறுகையில், “தோனி இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு தூண். அவர் ஆடுகளத்தில் இருக்கும் போதும், இல்லாத போதும் வழிகாட்டியாக இருக்கிறார். நான் விளையாடிய ஒவ்வொரு கேப்டன்களும் வித்தியாசமானவர்கள். அனைவரையும் ஒப்பீடு செய்ய முடியாது.
கேப்டனாக கங்குலி செய்தது மிகவும் வித்தியாசமானது. எப்போதும் பாராட்டத்தக்கது. ஆனால் தோனி செய்தது, 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை போன்ற மதிப்பு மிக்க வெற்றிகளை பெற்றுக் கொடுத்தது. சவுரவ் கங்குலியும், தோனியும் இந்திய அணியை உச்சத்துக்கு கொண்டு சென்றவர்கள்.
விராட் கோலி தலைமையிலான தற்போதையை அணியும் சிறப்பாக உள்ளது. ஒரு கேப்டனாக விராட் கோலி இளம் அணியை ஊக்குவிக்கிறார். விராட் ஒரு கிளாசிக் கிரிக்கெட் வீரர்” என்றார்.
‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..!
சச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..!
கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது
“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..!
"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்"- தமிழருவி மணியன்..!