[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்

பிரான்ஸை பயமுறுத்தும் 'ரெட் டெவில்ஸ்' பெல்ஜியம் !

fifa-world-cup-2018-semifinals-france-england-belgium-and-croatia-left-standing-in-russia

உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிச் சுற்று ஆட்டம் நாளை தொடங்குகிறது. இதில் பிரான்ஸ் - பெல்ஜியமும் இடையிலான போட்டி நாளையும், புதன்கிழமை நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதுகின்ற. பிஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 32 நாடுகளின் அணிகள் லீக் போட்டிகளில் பங்கேற்றன.

அதிலிருந்து 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. பின்பு, அதிலிருந்து 8 அணிகள் காலிறுதிப் போட்டியில் பங்கேற்றன. இப்போது நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் வெற்றிப் பெறும் அணி ஜூலை 15 ஆம் தேதி நடைபெவுள்ள இறுதிப் போட்டியில் மோதும்.

எப்போதும் இல்லாத வகையில் இம்முறை சாம்பியன் அணிகளான ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுகல், உருகுவே அணிகள் நாக் அவுட் மற்றும் காலிறுதி்ப் போட்டியோடு வெளியேறிவிட்டன. இதனையடுத்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் தென் அமெரிக்க நாடுகளின் அணிகள் இல்லாமலேயே அனைத்தும் ஐரோப்பிய நாடுகளின் அணிகளே பங்கேற்கின்றன. இது கால்பந்தை தங்கள் வாழ்வின் அங்கமாக நினைக்கும் தென் அமெரிக்க ரசிகர்களின் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் - பெல்ஜியம்

பிரான்ஸ் - பெல்ஜியம் மோதும் அரையிறுதி ஆட்டம் நாளை இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் இடையிலான ஆட்டம் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலகக்கோப்பையில் இரு அணிகளுமே தோல்வியை சந்திக்கவில்லை என்பதால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் இதுவரை 14 கோல்களை அடித்துள்ளது. லுகாகு 4, ஹசார்ட் 2 கோல்களை அடித்துள்ளனர். பிரான்ஸ் வீரர்களில் பால் போக்பா, கோலோ கண்டே, மற்றும் கிரைஸ்மேன், மாப்பே போன்றவர்கள் டிஃபன்ஸிலும், தாக்குதல் ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பிரான்ஸ் இந்த உலகக் கோப்பையில் இதுவரை 9 கோல்களை அடித்துள்ளது. 

குரோஷியா - இங்கிலாந்து 

இங்கிலாந்து அணியில் ஒரு காலத்தில் பெக்காம், ரூணி போன்ற ஜாம்பவான் வீரர்கள் இருந்தனர். அப்போதெல்லாம் அந்த அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடிந்ததில்லை. கடைசியாக 1966 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அதன் பின்னர் சோபிக்கவில்லை. 1990 ஆம் ஆண்டு ஓரே முறை அரையிறுதிக்கு முன்னேறி மேற்கு ஜெர்மனியிடம் தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்து அணி முற்றிலும் இளம் வீரர்களை கொண்டதாக உள்ள  நிலையில் அதன் கேப்டன் ஹாரி கேன், ஹாரி மேகியூர், டெலி அலி, ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


குரோஷியா அணி 1998 உலக்க கோப்பை அரையிறுதியில் பிரான்ஸிடம் தோற்று 3-ஆம் இடத்தை  பெற்றது. குரோஷிய அணியில் மொட்ரிக், மண்டுஸூகிக் இருக்கின்றனர். முக்கியமாக கோல் கீப்பர் சுபாஸிக் இருக்கிறார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close