[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!

gabriel-packs-off-bangladesh-inside-three-days

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலா ன முதல் டெஸ்ட் போட்டி, ஆன்டிகுவா நகரில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்து வந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆட்டத்தை தொடங்கிய பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸில் 18.4 ஓவர்களில் வெறும் 43 ரன்களுக்கு சுருண்டது. பங்களாதேஷ் அணியின் குறைந்தப்பட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் இது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச் 5 விக்கெட்டு களை வீழ்த்தினார். 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 406 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் அபார சதமடித்தார். அவர் 121 ரன்களும் சாய் ஹோப் 67 ரன்களும், டிவோன் ஸ்மித் 58 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷ் தரப்பில் அறிமுக வீரர் அபு ஜெயத், மெஹிடி தலா 3 விக்கெட்டுகளையும் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி, வெஸ்ட் இண்டீஸின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை மளமளவென இழந்தது. அந்த அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது. மகமத்துல்லா 15 ரன்களுடனும் நுருல் ஹசன் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

மூன்றாம் நாள் ஆட்டம் தொடர்ந்தது.  மகமத்துல்லா மேலும் ரன் ஏதும் சேர்க்காமல் அவுட் ஆனார். நுருல் ஹசன் தாக்குப் பிடித்து 64 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்தவர்கள் நிலையாக நிற்காததால், 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது, பங்களாதேஷ் அணி. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, வெஸ்ட் இண்டீஸ் அணி.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல் 5 விக்கெட்டையும் ஹோல்டர் 3 விக்கெட்டையும் கம்மின்ஸ் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close