[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

சின்னஞ்சிறு வயதினிலே….!   

local-games-of-tamilnadu

நாங்கலாம் சின்ன வயசா இருக்கும் போது இது விளையாடுவோம்… அது விளையாடுவோம்னு பாட்டிகள் கதை சொல்ல பேரப் பிள்ளைகள் வாய் பிளந்து கேட்பார்கள். பாட்டி சொல்லும் கதையில் அத்தனை சுவாரஸ்யம் இருக்கும். அடுத்தபடியாக அம்மாவோ, அப்பாவோ அவர்களில் சிறு வயது பிளாஷ்பேக்கை அள்ளி தெளிப்பார்கள். அதிலும் ஒருவித ரசனை இருக்கும். ஆனால் அதன் பிறகு வந்த தலைமுறைகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பு எதிர்காலத்தில் கிடைப்பது கேள்விக்குறி தான்?! 

இப்போதிருக்கும் தலைமுறைகள் இன்னும் கொஞ்ச காலம் சென்று திரும்பி பார்த்தால் அவர்களின் குழந்தை பருவத்தில் வெறுமைதான் இருக்கும் போல.! 
இது நகர் புறங்களில் மட்டுமல்ல பெரும்பாலம் கிராமங்களும் இத்தகைய நிலையில் தான் இருக்கின்றன. !
நம் வாழ்விடத்திற்கு அழகே நம்மை சுற்றியிருக்கும் இயற்கை அழகும்… குழந்தைகளின் குதூகலமும்  தான். ஒரு தெருவில் நான்கு சிறுவர்கள் இருந்தால் போதும் … டயர் ஓட்டுவது , தட்டான் பிடிப்பது, கயிறு தாண்டுவது என எந்நேரமும் அவர்களை விளையாட்டு உலகில் தான் பார்க்க முடியும்.

ஆனால் இப்போது…?!

பிறந்த ஒரு வயது ஆனதுமே குழந்தைக்கு மொபைல் பழக கற்று கொடுத்து விடுகிறோம். வயது ஆக ஆக குழந்தைகள் மொபைலிலேயே முழுவதும் மூழ்கி போகிறார்கள். மொபைல்  கேம்கள் போரடித்தால்…! கார்ட்டூன் சேனல்கள் அரவனைத்து கொள்ளும். இப்படி ஒன்று மாற்றி ஒன்று இருப்பதால் இருக்கும் இடத்தை விட்டு நகர மறுக்கிறார்கள் குழந்தைகள். பெற்றோர்களும் இதுவே போதும் என்று விட்டு விடுகிறார்கள்.

ஆனால், இந்த வசதிகள் எல்லாம் அப்போது இல்லை. குழந்தை விளையாட வேண்டும் என்றால் வீட்டை விட்டு வெளியே வந்து தான் ஆக வேண்டும். தெருவில் இருக்கும் குழந்தைகளுடன் கூடி தான் ஆட வேண்டும்… பாட வேண்டும், இப்படி குழந்தைகள் குழுவாக விளையாடுவதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்க்கலாம். குழந்தைகள் விளையாடும் போது தான் அதன்  முழு குறும்பு தனங்களை பார்க்க முடியும். 
குழந்தைகள் ஒரு புறம்  என்றால்  பெண்களும் அப்போதெல்லாம் தங்களுக்கென்றே சில விளையாட்டுகளை வைத்திருந்தார்கள். 
பல்லாங்குழி ,தாயம் ,பாண்டி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்… இன்னமும் கூட தாய கட்டைகளும் பல்லாங்குழி உருளைகளும் ஆன்லைனில் விற்கப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதை காணும் போது பரவாயில்லை எங்கோ ஒரு மூலையில் இது இன்னும் உயிர்பித்து கொண்டிருக்கிறது என்று மனம் ஆறுதல் கொள்கிறது.  

பாண்டி

சில்லு பாண்டி என்று சில கிராமங்களில் இதை சொல்வதுண்டு. இரண்டு முதல் நான்கு பேர் சேர்ந்து இந்த விளையாட்டை வினையாடுவார்கள் . 20 வருடங்களுக்கு முன்பாக உள்ள திரைப்படங்களில் கூட இத்தகைய விளையாட்டை ஹீரோயின்கள் விளையாடுவதை நாம் பார்த்திருப்போம் . நெற்றியில் சில்லை வைத்து கொண்டு வானத்தை பார்த்த வண்ணம் ஒவ்வொரு கட்டமாக தாண்டி வரும் போது ரைட்டா ரைட்டா என்று கேட்கும்  காட்சிகள் நினைவுக்கு வருகிறதா ?!

ஒரு குடம் தண்ணி ஊற்றி 
 “ஒரு குடம் தண்ணி ஊற்றி ஒரெ பூ பூத்தது “  இந்த பாடல் வரிகள் எல்லாம் மழலை மொழி பேசும் குழந்தைகளுக்கு கூட மனப்பாடமாக தெரியும்.தேனீக்கள் கூட்டம் போல ஒரு பெரிய கூட்டமே இந்த விளையாட்டில் இருக்கும் .

பூப்பறிக்க வருகிறோம்:
எதிரெதிர் பக்கம் குழுவாக பிரிந்து நின்று கொள்வார்கள்   “பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் “ என்று ஒரு அணி எதிர் அணியை நோக்கி வர… அது பின்னோக்கி செல்லும். மீண்டும் அவர்கள் முன்னோக்கி வந்து  “யாரை நோக்கி வருகிறீர் “? என்றதும் அவர்கள், அந்த அணியில் உள்ள ஒரு பெயரை சொல்லி தன் அணிக்கு இழுப்பார்கள். பதிலுக்கு இவர்களும் மல்லுகட்டுவார்கள் .இப்படி போகும் இந்த ஆட்டம் பாட்டுகளுடன் .

கண்ணாமூச்சி ரே ரே , கூட்டாஞ்சோறு , பம்பர ஆட்டம் , திருடன் போலீஸ் இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

ஆண்டுகள் பல கடந்தாலும் அந்த காலங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா என்ன?!

மணல் மேட்டில் மண் குடம் 
செய்து விளையாடிய மாலை நேரம்...

ஒற்றையடி பாதையில் ஓடி ஓடி 
ஓணானை பிடித்த மாலை நேரம்...

அம்மா அணிவித்த ஆடையயை அரைமணி நேரத்தில் 
அழுக்காக்கி விட்ட மாலை நேரம்...

பட்டாம் பூச்சி பிடிக்க 
படையோடு கிளம்பிய மாலை நேரம்...

சேற்றில் சோறு குழம்பு செய்ய 
சருகு பொறுக்க சென்ற மாலை நேரம்...

காகிதத்தில் கப்பல் விட்டு கண் இமைக்காமல் 
மழையைக் கண்ட மாலை நேரம்...

கொட்டும் மழையில் 
குடை பிடிக்காமல் 
கொண்டாட்டம் போட்ட மாலை நேரம்…

தெரு தெருவாய் அலைந்து 
தெருவோரமாய் விளையாடும் குழந்தையை 
தேடி பிடித்து அம்மா 
அடிக்கும் மாலை நேரம்...

ஆண்டாண்டு கடந்தாலும் 
மறக்க முடியாத  நேரங்கள்… 
இந்த 
குழந்தை பருவ காலங்கள்!.. 
 

ஆனால் இப்போது உள்ள குழந்தைகளுக்கு இதுவெல்லாம் எங்கே தெரிய போகிறது அப்படியே சொன்னாலும் அதற்கும் “ஆப்” இருக்கிறதா என்று கேட்பார்கள் …!!!      


(ஞாபகம் வருதே தொடரும் ….)
                   
                              
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close