[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

ஐ.பி.எல் கிரிக்கெட்: பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி

ipl-cricket-bangalore-beat-punjab-by-one-run

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி 20 ரன்களும், ராகுல் 42 ரன்களும் எடுத்தனர். டி வில்லியர்ஸ் 35 பந்துகளில் 64 ரன்களும், சச்சின் பேபி 33 ரன்களும் எடுத்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. சந்தீப் ஷர்மா, கரியப்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய பஞ்‌சாப் அணியில் ஹஸிம் ஆம்லா, கேப்டன்‌முரளி விஜய் ஆகியோர் களமிறங்களினர். 57 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து விஜய் ஆட்டமிழந்தார்.

இறுதியாக ஜோர்டான் வீசிய கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால், அந்த ஓவரில் 15 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி எடுத்தது. இதனால், ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close