[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

‘4 பேர் டக் அவுட்’ - 43 ரன்னில் சுருண்டு வங்கதேச அணி பரிதாபம்

bangladesh-crash-to-their-lowest-total-after-roach-s-five

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 43 ரன்னில் சுருண்டது.

வங்கதேசம் அணி முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசியது. 

வங்கதேச அணி சார்பில் தமிம் இக்பால், லிடன் தாஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அந்த அணி 10 ரன்கள் எடுத்திருந்த போது தமிம் இக்பால் 4 ரன்னில் ரோச் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதேவேகத்தில் அடுத்தடுத்து களமிறங்கியவர்களை, வந்த வேகத்தில் பெவிலியன் திருப்பி அனுப்பினர் ரோச். கண் இமைக்கும் நேரத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டே இருந்தன. 18 ரன்கள் இருக்கும் போது அடுத்தடுத்து மூன்று விக்கெட்கள் வீழ்ந்தன. ரோச் ஒரு கட்டத்தில் நிறுத்த, கம்மில் விக்கெட்டுகளை வரிசையாக சாய்த்தார். சிறிது நேரம் நிலைத்து ஆடிய தாஸ் 25(53) ரன்னில் ஆட்டமிழந்தார். 

இறுதியில் வங்கதேசம் அணி 18.4 ஓவர்களில் 43 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் 4 பேர் டக் அவுட் ஆனார்கள். 5 பேர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கம்மிஸ் 3, ஹோல்டர் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. 

2000-01 ஆம் ஆண்டில் இருந்து வங்கதேசம் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 43 ரன் என்பதே அதன் குறைந்தபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் ஆகும். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close