[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

குல்தீப் சுழலும், ராகுலின் புயலும் ! மிரண்டுப்போன இங்கிலாந்து

india-vs-england-1st-t20i-kuldeep-five-for-rahul-ton-power-india-to-8-wicket-win-over-england

இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் முதலாவது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இங்கிலாந்து இதற்கு முன்பு நடந்த ஆஸ்திரேலியாவுடனான தொடர்களில் சிறப்பாக விளையாடி வெற்றிப் பெற்றதால், இந்தியாவுடனான போட்டி பரபரப்புடன் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இந்தியா சார்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ் குமாரும், உமேஷ் யாதவும் பந்து வீசினார். ஆனால், இந்த இருவரின் பந்துகளையும் நாலாபுறமும் சிதரடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 6 ஓவர்களில் 50 ரன்களை குவித்தனர். இந்நிலையில் ஜேசன் ராய் 30 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீசில் க்ளீன் போல்டாகி அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் பட்லர் தடாலடியாக ரன்களை குவிக்கத் தொடங்கினார்.

ஆனால் மறுமுனையில் அடுத்தடுத்து களமிறங்கிய ஹேல்ஸ், ரூட், மார்கன், பேர்ஸ்டவ் ஆகியோரை தனது அபாரமான சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழக்கச் செய்தார் "சைனா மேன்" சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இறுதியாக ஜோஸ் பட்லரும் 46 பந்துகளில் 69 ரன்கள் குவித்து குல்தீப்பின் சுழலில் ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

160 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷிகர் தவான் 4 ரன்களில் அவுட்டானார். இதற்கடுத்து களமிறங்கிய லோகேஷ் ராகுல் அதிரடியை காட்டினார். இங்கிலாந்து பந்து வீச்சை விரட்டி விரட்டி அடித்தார். மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த ரோகித் சர்மா 32 ரன்களில் அவுட்டானார்.

பின்பு, லோகஷ் ராகுலுடன் கோலி இணைந்தார். ஆனால், லோகேஷ் ராகுல் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். கோலி நிதானமாக ஆடி 22 ரன்களில் களத்தில் இருந்தார். இறுதியில்  இந்தியா 18.2 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் இப்போது இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தத் தொடரின் இரண்டாவது டி20 போட்டி ஜூலை 6 ஆம் தேதி கார்டிஃப் நகரில் நடைபெறுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close