[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.

இந்திய சுழலா, இங்கிலாந்து பேட்டிங்கா? இன்று, முதல் டி20 போட்டி!

manchester-t20-to-kickstart-limited-overs-blockbuster

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு நடக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி, ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான, 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி, மான்செஸ்டரில்
இன்று நடக்கிறது. அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை வென்ற கையுடன் இந்த போட்டியில் இந்திய அணி களம் இறங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வொயிட்வாஷ் செய்து பலம் வாய்ந்த அணியாக இங்கிலாந்து அணி திகழ்கிறது. அந்த அணியை, அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம். இதனால் இந்தத் தொடர் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என்கிறார்கள்.

நம்பர் ஒன்னாக இருக்கும் இங்கிலாந்து அணியின் வீரர்கள், ஐபில் தொடரில் கிடைத்த அனுபவத்தோடு நம்பிக்கையாக இருக்கிறார்கள். ஜோஸ்பட்லர் மற்றும் ஜேசன் ராய் ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டி ஃபார்முக்குத் திரும்பியவர்கள். அதே அதிரடியை இங்கும் தொடர்ந்து வருகிறார்கள். இந்திய அணி வீரர்களின் சுழல் பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு மற்றும் ஆட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள் என்பதால், அது அந்த அணிக்கு பலம். அவர்களோடு பேர்ஸ்டோவ், ஹேல்ஸ், ரூட், மோர்கன் ஆகியோரும் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். சுழலில், மொயின் அலி, அடில் ரஷித் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பிளங்கட், டேவிட் வில்லி, ஜோர்டான் ஆகியோரும் நம்பிக்கையோடு களமிறங்குவார்கள். 

 ‘ஐபிஎல் தொடரில் எங்கள் வீரர்களுக்கு சிறப்பான அனுபவம் கிடைத்துள்ளது. அதை இங்கு வெளிப்படுத்துவார்கள்’ என்கிறார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்.

வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணியில் இல்லை. கடைசி கட்ட ஓவர்களின் கில்லி, பும்ரா. அவர் இல்லாதது இழப்புத்தான் என்றாலும் உமேஷ் யாதவோ, புவனேஷ்வர்குமாரோ அவர் இடத்தை நிரப்புவார்கள் என்று நம்பலாம். அதோடு சேஹல், குல்தீப் சுழல் மாயம் இங்கிலாந் து அணியை திணறடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

பேட்டிங் வரிசையில் இந்திய அணி பலமாக இருக்கிறது. இருந்தாலும் ஷாட் பிட்ச் பந்துகளில் திணறுகிறார்கள். அதை எதிர்கொள்வதற்காக இந்திய வீரர்கள் கடும் பயிற்சி மேற்கொண்டனர். ரோகித் சர்மா, தவான், ராகுல், ரெய்னா, கோலி, தோனி என சரியான பேட்டிங் வரிசை இருக்கிறது. இருந்தாலும் குறுகிய ஓவர் போட்டியில் எதுவும் நடக்கலாம் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

டி20 போட்டியில் இரு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 5 போட்டியிலும் இங்கிலாந்து 6 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய நேரப்படி, இரவு 10 மணிக்கு போட்டித் தொடங்குகிறது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close