[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

எங்களுக்கு பயமெல்லாம் இல்லை: விராத் கோலி

want-to-win-every-session-every-ball-virat-kohli

ஒவ்வொரு போட்டியையும் தொடரையும் வெல்ல வேண்டும் என்று நினைப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி, ஐந்து டெஸ்ட் போட்டியில் விளை யாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான, 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி, மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை வென்ற கையுடன் இந்த போட்டியில் இந்திய அணி களம் இறங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்று பலம் வாய்ந்த அணியாக இங்கிலாந்து அணி திகழ்கிறது. 

இந்நிலையில் இந்தப் போட்டித் தொடர் குறித்து, இந்திய கேப்டன் விராத் கோலி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘சிறந்த அணிக்கு எதிராக அவர்கள் சொந்த மண்ணில் விளையாடி வெல்வதை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது எங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. அழுத்தமாக இல்லை. ஏனென்றால் இங்கிலாந்து அணி, கடந்த முறை இந்தியா வந்தபோது நாங்கள் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றோம். இப்போது அவர்கள் மண்ணுக்கு வந்திருக்கிறோம். அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். நாங்கள் பயமில்லாத கிரிக்கெட்டை விளையாடுவோம். இழப்பதற்கு ஒன்றுமில்லை.

போட்டி முடிவுகளைப் பற்றி யாரும் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும் என நினைக்கிறோம். இந்த நீண்ட தொடரில் அதை செய்தால் ஒரு கேப்டனாக பெருமை கொள்வேன். அணியாகவும் எங்களுக்கு பெருமைதான்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் இதையே செய்தோம். சில போட்டிகளை நாங்கள் இழந்தாலும் எங்கள் மனநிலையை ஒரே மாதிரி வைத்திருந்தோம். இந்தத் தொடரிலும் வெற்றி பெறுவோம் என்ற மனநிலையைப் பெற்றுவிட்டால், அதிகமாகக் கற்றுக்கொள்வோம்.

பேட்டிங் வரிசையில் தேவைக்கு ஏற்றது போல மாற்றங்கள் செய்ய இருக்கிறோம். அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் இருக்கும். உலகக் கோப்பைத் தொடருக்கு அது உதவுவதாக இருக்கும்’ என்றார். 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close