[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

இங்கிலாந்துக்கு எதிரான டி20: ஷாட் பிட்ச் பந்துகளில் இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சி!

raina-fiddles-with-bats-and-technique

இங்கிலாந்தில், தீவிரப் பயிற்சியில் இறங்கி இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி! இங்கிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில் நாளை மோத இருப்பதால் இந்தத் தீவிரப் பயிற்சி. 

தரவரிசையில் நம்பர் ஒன்னாக இருக்கும் இங்கிலாந்து அணியை அவர்களின் சொந்த மண்ணில் வெல்ல, துடிப்போடு களமிறங்கியிருக்கிறது இந்திய அணி! தற்போது செம பார்மில் இருக்கும் அந்த அணியுடனான போட்டி சவாலானதாகவே இருக்கும் என்கிறார்கள் முன்னாள் வீரர்கள். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியை ’வொயிட்வாஷ்’ செய்ததை அதற்கு உதாரணமாகச் சொல்கிறார்கள்.

(கே.எல்.ராகுல்)

‘நாங்களும் சளைத்தவர்கள் அல்ல’ என்று களத்தில் குதிக்கிறது விராத் அண்ட் கோ. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் இந்திய அணியும், பக்கா. ஆனால், இங்கிலாந்து அணி உள்ளூரில் விளையாடுவது அவர்களுக்கு சாதகம்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரப் பயிற்சியில் இறங்கியிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. மான்செஸ்டரில் நேற்று நடந்த பயிற்சியில் விராத் கோலி, ஷாட் பிட்ச் பந்துகளைச் வீசச் சொல்லி அதிகப் பயிற்சி எடுத்தார். அயர்லாந்துக்கு எதிராக நடந்த இரண்டு டி20 போட்டியிலும் விராத் அதிக ரன் குவிக்கவில்லை. எளிதாக விக்கெட்டை இழந்துவிட்டதால் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டார். பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் அவரை கவனித்துக்கொண்டார்.

ஷிகர் தவானுக்கு, நெட்டில் வழக்கமாக பந்துவீசும் உள்ளூர் வீரர்கள் வீசினார்கள். அதில் பயிற்சிப் பெற்ற தவான், பிறகு புவனேஷ்வர்குமாரை வீசச் சொன்னார். அவர் வீசிய ஷார்ட் பந்துகளில் அடித்து ஆடினார். ஆனால் பந்து அவரை பதம் பார்த்தது. லேசாகப்பட்டதால் தப்பித்தார். அனைத்து பந்துகளையும் அசால்ட்டாக விளாசி அசத்தினார் அவர்.

சுரேஷ் ரெய்னா, பேட்களின் காதலர். ஏராளமான பேட்களை சுமந்துகொண்டே அலைபவர். (அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ரெய்னாவுக்கு தோனி பேட் சுமந்து வந்தது ஞாபகமிருக்கிறதா?) நேற்றைய பயிற்சிக்கு இரண்டு பேட்களுடன் வந்தார் ரெய்னா. அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஷாட் பிட்ச் பந்துகளில் திணறினார் அவர். அதனால் அந்த மாதிரி வீசச் சொல்லி பயிற்சி மேற்கொண்டார். அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் அந்த பந்துகள் வரும்போது உடலை எப்படி மாற்றிக்கொண்டு நிற்க வேண்டும் என்றும் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், விளக்கினார் ரெய்னாவுக்கு .

இன்றும் பயிற்சியை தொடர்கிறார்கள் இந்திய வீரர்கள். பயிற்சியில் நேற்று ஈடுபட்ட வீரர்களை வைத்து, இவர்களெல்லாம் நாளைய ஆடும் லெவனில் இருக்கலாம் என்று கணிக்கிறார்கள். கணிப்புதான்! 

அவர்கள் விவரம்:
ரோகித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், விராத் கோலி, தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், சேஹல்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close