ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய ஷேன் வாட்சனின் ஒப்பந்தத்தை, சிட்னி தண்டர் அணி மேலும் 2 வருடத்துக்கு நீட்டித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன். சர்வதேசப் போட்டிகளில் இருந்து 2015-ல் ஓய்வுபெற்ற இவர், டி20 லீக் போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் லீக், ஐபிஎல், வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் கரீபியன் லீக், பிக்பேஷ் டி20 தொடர்களில் விளையாடி வரும் அவருக்கு தற்போது 37 வயது!
பிக்பேஷ் லீக் போட்டியில், சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக இருக்கும் வாட்சனின் பதவிகாலம் இந்த வருடத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் அவர் வேறு அணியில் இணைந்து விளையாடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய அவர், இறுதி போட்டியில் 51 பந்தில் சதம் அடித்து கோப்பையை வெல்ல உதவினார்.
இதையடுத்து, அவரது ஃபார்மை கணக்கில் கொண்டு சிட்னி தண்டர் அணி, அவரது ஒப்பந்தத்தை மேலும் 2 வருடத்துக்கு நீட்டித்துள்ளது. இதையடுத்து இன்னும் இரண்டு தொடர்களுக்கு அவர் கேப்டனாக செயல்படுவார்.
இதுபற்றி வாட்சன் கூறும்போது, ’சிட்னி தண்டர் அணியில் எனது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டிருப்பது உற்சாகமாக இருக்கிறது. பாகிஸ்தான் லீக், ஐபிஎல்- தொடர்களில் சிறப்பாக விளையாடினேன். இதனால் மகிழ்ச்சி. சிட்னி தண்டர் அணி, அடுத்த தலைமுறை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களையும் உருவாக்கி வருகிறது. எங்கள் அணியில் அதிகமான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அடுத்தத் தொடரில் எங்கள் அணி, இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இருக்கும்’ என்றார்.
‘ஆவணங்கள் வேண்டாம்’ உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு பணம் வழங்கிய எல்.ஐ.சி
‘வீரர்களுக்கு அஞ்சலி’- பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடங்கள் விநியோகம் நிறுத்தம்
‘இனி எந்த மகனையும் இழக்கக்கூடாது’ சிஆர்பிஎப் வாகனத்தை ஓட்டிய வீரரின் தந்தை ஆவேசம்
‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி
‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !