[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

சிஎஸ்கே-வால் வாட்சனுக்கு கிடைத்த வாய்ப்பு!

sydney-thunder-re-sign-watsonsydney-thunder-re-sign-watson

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய ஷேன் வாட்சனின் ஒப்பந்தத்தை, சிட்னி தண்டர் அணி மேலும் 2 வருடத்துக்கு நீட்டித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன். சர்வதேசப் போட்டிகளில் இருந்து 2015-ல் ஓய்வுபெற்ற இவர், டி20 லீக் போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் லீக், ஐபிஎல், வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் கரீபியன் லீக், பிக்பேஷ் டி20 தொடர்களில் விளையாடி வரும் அவருக்கு தற்போது 37 வயது!

பிக்பேஷ் லீக் போட்டியில், சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக இருக்கும் வாட்சனின் பதவிகாலம் இந்த வருடத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் அவர் வேறு அணியில் இணைந்து விளையாடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய அவர், இறுதி போட்டியில் 51 பந்தில் சதம் அடித்து கோப்பையை வெல்ல உதவினார்.

இதையடுத்து, அவரது ஃபார்மை கணக்கில் கொண்டு சிட்னி தண்டர் அணி, அவரது ஒப்பந்தத்தை மேலும் 2 வருடத்துக்கு நீட்டித்துள்ளது. இதையடுத்து இன்னும் இரண்டு தொடர்களுக்கு அவர் கேப்டனாக செயல்படுவார். 

இதுபற்றி வாட்சன் கூறும்போது, ’சிட்னி தண்டர் அணியில் எனது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டிருப்பது உற்சாகமாக இருக்கிறது. பாகிஸ்தான் லீக், ஐபிஎல்- தொடர்களில் சிறப்பாக விளையாடினேன். இதனால் மகிழ்ச்சி. சிட்னி தண்டர் அணி, அடுத்த தலைமுறை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களையும் உருவாக்கி வருகிறது. எங்கள் அணியில் அதிகமான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அடுத்தத் தொடரில் எங்கள் அணி, இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இருக்கும்’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close