[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

அயர்லாந்துடன் 2-வது டி20: ரோகித் சர்மாவுக்கு ரெஸ்ட், ராகுலுக்கு வாய்ப்பு!

india-focus-on-experiments-with-ireland-series-on-the-line

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. அதற்கு முன்பாக அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இங்கிலாந்து தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டம் போல இந்த தொடர் அமைந்திருக்கிறது. 

முதல், டி20 போட்டி டப்ளினில் நடந்தது. இதில் இந்திய அணி, 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணியின் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் அதிரடியாக விளையாடி அரைசதத்தைப் பூர்த்தி செய்தனர். தவான் 45 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 61 பந்துகளில் 5 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் சேர்த்து மூன்று ரன்களில் சதத்தை தவறவிட்டார்.

இந்த அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் சோதனை முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக கேப்டன் விராத் கோலி கூறியுள்ளார். இதனால் இலங்கையில் நடந்த டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி, கோப்பையை வெல்ல காரணமாக இருந்த தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் களமிறக்கப்படுகிறார். ரோகித் சர்மா அல்லது தவானுக்கு ஓய்வளிக்கப்பட்டு கே.எல்.ராகுலுக்கு  வாய்ப்பு அளிக்கப்படும். பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர்குமாருக்குப் பதிலாக உமேஷ் யாதவும் பும்ராவுக்கு பதிலாக சித்தார்த் கவுலும் விளையாடுவார்கள் எனத் தெரிகிறது.

முதல் போட்டியில் வென்ற நம்பிக்கையுடன் இந்திய அணி இன்றைய போட்டியிலும் களமிறங்கும்.  இன்றை போட்டியை காண அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கர் வர இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதால் இன்றைய போட்டியும் பரபரப்பாக இருக்கும்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close