[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

தமிழக சுழல் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் காயம்!

washington-sundar-suffers-injury-blow-ahead-of-first-t20i-against-ireland

அயர்லாந்தில், பயிற்சியின் போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இதனால் இங்கிலாந்து தொடரில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழக இளம் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர். ஆல்ரவுண்டரான இவர், இலங்கையில் நடந்த நிஹடாஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக பந்துவீசினார். இதையடுத்து இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. 

இந்நிலையில் அயர்லாந்து அணியுடன் இந்திய அணி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடந்தது. இதில் வாஷிங்டன் சுந்தரும் இடம்பெற இருந்தார். இந்நிலையில் நேற்று முன் நடந்த பயிற்சியின் போது அவர் காலில் படுகாயமடைந்தார். மைதானத்தில் கால்பந்து விளையாடுபோது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. நடக்க முடியாமல் தவித்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

அவரது காயத்தின் தன்மை குறித்து பிஐசிசி அதிகாரப்பூர்வமாக இன்னும் ஏதும் தெரிவிக்கவில்லை. காயம் கடுமையாக இருந்தால் இங்கி லாந்துக்கு எதிரான தொடரில் இருந்து அவர் விலகுவார் என்றும் அவருக்கு பதில் அக்சர் படேல், அல்லது குணால் பாண்ட்யா சேர்க்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது. 

வாஷிங்டன் சுந்தர் இதுவரை ஒரு ஒரே சர்வதேச ஒரு நாள் போட்டியிலும் 6 டி20 போட்டியிலுமே பங்கேற்றுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close