[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

அடுத்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக், ராகுலுக்கு வாய்ப்பு: விராத் சூசக தகவல்!

dk-rahul-may-get-a-chance-in-2-t20

’அடுத்தப் போட்டில் புதிதாக சிலருக்கு வாய்ப்பளிக்கப்படும்’ என்று இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. அதற்கு முன்பாக அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி டப்ளினில் நேற்று இரவு நடந்தது. இதில் இந்திய அணி, 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 97 ரன்களும் தவான் 74 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் குல்தீப், சேஹல் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசினர். 4 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, ‘ரோகித்தும் தவானும் நன்றாக ரன் குவித்து நல்ல இடத்துக்கு கொண்டு வந்தனர். கடைசி ஓவரில் அயர்லாந்து அணி சிறப்பாக பந்துவீசியது. தொடக்க ஆட்டக்காரர்களைத் தவிர்த்து மிடில் ஆர்டரில் சோதனை முயற்சியாக சில மாற்றங்களை செய்ய இருக்கிறோம். அதற்கேற்ற மாதிரி அடுத்த போட்டி அமையும். இன்றைய போட்டியில் விளையாடாத சிலருக்கு அடுத்தப் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும். சில தொடர்களில் அணியில் இடம் கிடைத்தும் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடு கிறது. அதைப் போக்கும் விதமாகவும் வீரர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் இதை செயல்படுத்த இருக்கிறோம்’ என்றார்.

இதையடுத்து அயர்லாந்து அணியில் நேற்றைய போட்டியில் விளையாடாத கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் உட்பட சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close