[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு
  • BREAKING-NEWS சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி

virat-kohli-on-the-verge-of-breaking-another-record

அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி புதிய சாதனையை படைக்க காத்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையில், இந்திய கிரிக்கெட் அணி இன்று அயர்லாந்து அணியுடன் டி20 போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி இந்திய அணி பங்கேற்கும் சர்வதேச 100-ஆவது டி20 கிரிக்கெட் போட்டியாகும். எனவே ரசிகர்கள் இந்தப் போட்டியை காண உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். 8.30 மணியளவில் இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த டி20 போட்டியில் புதிய சாதனையை படைக்க கேப்டன் விராட் கோலி காத்திருக்கிறார்.

29 வயதாகும் விராட் கோலி இன்னும் 17 ரன்கள் எடுத்தால் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை குவித்தவர் என்ற பெருமையை பெறுவார். இதுவரை 57 சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ள விராட் கோலி 1983 ரன்கள் எடுத்துள்ளார். சரசாரி ரன்கள் வீதம் 50.84 ஆகும்.

சர்வதேச டி-20 போட்டிகளில் அதிகப்பட்டசமாக இதுவரை நியூசிலாந்தை சேர்ந்த மார்ட்டின் குப்தில் 2271 ரன்களும், பிரெண்டன் மெக்கல்லம் 2140 ரன்களும், பாகிஸ்தானின் சோயிப் மாலிக் 1989 ரன்களும் எடுத்துள்ளனர். பிரண்டன் மெக்கல்லம் தனது 66-வது இன்னிங்சிலும், குப்தில் தனது 68-வது டி-20 போட்டியிலுமே  2000 ரன்களை கடந்திருந்த நிலையில் இன்றைய டி-20 போட்டியில் விராட் கோலி 17 ரன்கள் எடுக்கும்பட்சத்தில் அதிவேகமாக 2000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். அத்தோடு சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் பெறுவார். ஐசிசியின் பேட்ஸ்மேன்களுக்கான டி-20 தரவரிசையில் தற்போது விராட்கோலி 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close