[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: வெற்றியை நோக்கி இலங்கை!

sri-lanka-require-another-63-runs-with-5-wickets-remaining

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாஸில் பகலிரவு ஆட்டமாக நடந்து வருகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 204 ரன்கள் சேர்த்தது. டோவ்ரிச் 71 ரன்களும் ஹோல்டர் 74 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டையும் குஷன் ரஞ்சிதா 3 விக்கெட்டையும் லக்மல் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. அந்த அணி, 154 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டிக்வெல்லா மட்டும் அதிகப்பட்சமாக 42 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ஹோல்டர் 4 விக்கெட்டையும் கேப்ரியல் 3 விக்கெட்டையும் ரோச் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, வெறும் 93 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் வீரர்களுக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் யாரும் நிலைத்து நிற்கவில்லை. ரோச் மட்டுமே 23 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இலங்கை தரப்பில் லக்மல், ரஞ்சிதா தலா 3 விக்கெட்டையும் லஹிரு குமரா 2 விக்கெட் டையும் வீழ்த் தினர்.

பின்னர் எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியும் திணறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் மகேலா உடவட்டே ரன் ஏதும் எடுக்காமலும் தனுஷ்கா குணதிலகா 21 ரன்னிலும் தனஞ்செய டி சில்வா 17 ரன்னிலும் ரோஷன் சில்வா ஒரு ரன்னிலும் டிக்வெல்லா 6 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதையடுத்து 5 விக்கெட் ழப்புக்கு 81 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது அந்த அணி. குசால் மெண்டிஸ் 25 ரன்களுடனும் பெரேரா ஒரு ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை வெற்றி பெற இன்னும் 63 ரன்கள் தேவை. இன்னும் ஐந்து விக்கெட் கையில் உள்ள நிலையில் பொறுமையாக வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது அந்த அணி.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close