[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

கால்பந்தாட்ட மைதானத்தில் ரகளை செய்த கங்காரு - வைரல் வீடியோ

kangaroo-invades-pitch-during-women-s-football-match-in-canberra

ஆஸ்திரேலியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் கங்காரு ஒன்று ரகளை செய்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. 

கன்பெர்ரா மற்றும் பெல்கானென் யுனடெட் பெண்கள் அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தப் போட்டியில் மைதனாத்திற்குள் திடீரென கங்காரு ஒன்று உள்ளே நுழைந்தது. மைதானத்தின் ஒரு மூலையில் இருந்து உள்ளே நுழைந்த அந்தக் கங்காரு உள்ளே தாவித்தாவி குதித்து ஓடியது. உள்ளே இருந்த பெண் கால்பந்தாட்ட வீரர்கள் கங்காரு திடீரென நுழைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடினர். 

பின்னர் கங்காருவை விரட்ட மைதான ஊழியர்கள் நீண்ட நேரமாக முயற்சித்தனர். ஆனால், அவ்வளவு எளிதில் கங்காரு வெளியே போகவில்லை. நீண்ட நேரம் போராடி கங்காருவை மைதானத்திற்கு வெளியே விரட்டினர். கங்காருவின் சேட்டையால் சிறிது நேரம் போட்டி தடைபட்டு பின்னர் மீண்டும் விளையாடினர். இதில், பெல்கானென் யுனடெட் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close