[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

’யோ-யோ’ முடிவை எடுத்தது யார்? கிரிக்கெட் வாரிய பொருளாளர் பரபரப்பு கடிதம்!

anirudh-chaudhry-raises-questions-over-use-of-yo-yo-test-for-selections

'யோ- யோ' உடல் தகுதித் தேர்வு தேவை என்கிற முடிவை யார், எப்போது எடுத்தார்கள் என்பதை விளக்குமாறு, இந்திய கிரிக்கெட் வாரிய பொரு ளாளர் அனிருத் சவுத்ரி பரபரப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில், ஒவ்வொரு தொடருக்கும் முன்பாக ‘யோ யோ’ என்னும் உடற்தகுதித் தேர்வு வீரர்களுக்கு மேற்கொள்ளப்படுகிற து. இதில் தேர்வு பெற்றால் மட்டும்தான் வீரர்கள் விளையாட முடியும். ‘யோ -யோ’வில் இந்திய வீரர்கள் தேர்வாக, 16.1 என குறைந்த பட்ச மதிப் பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்த இந்த முறையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர், அனில் கும்ப்ளே. அவர் பயிற்சியாளராக இருந்தபோது இந்த முறையை இறக்குமதி செய்தார்!

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ‘யோ யோ’ சோதனை சமீபத்தில் நடைபெற்றது. இதில், ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு  சோதனையில் தோல்வி அடைந்ததால் வெளியேற்றப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருந்த சஞ்சு சாம்சன் ஆகியோரும் தோல்வி அடைந்திருந்தனர். இதனால், யோ யோ சோதனை குறித்து பலர் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். 

இந்திய தேர்வுக் குழுவின் முன்னாள் உறுப்பினர் சந்தீப் பாட்டீல் கடுமையாக இதை எதிர்த்திருந்தார். அதோடு ’வருடம் முழுவதும் சிறப்பாக விளையாடும் வீரர்களை அரை மணி நேர உடல் தகுதி தேர்வின் அடிப்படையில் நீக்குவது எந்த விதத்தில் நியாயம்? வீரர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ’யோ-யோ’ தவிர்க்க முடியாது என்றும் அதில் தேர்வு பெற்றால் மட்டுமே விளையாட லாம், இல்லை என்றால் உட்கார வேண்டியதான் என்றும் கறாராகக் கூறியிருந்தார். அணித் தேர்வுக்குழுவும் ஒட்டுமொத்த அணி நிர்வாகமும் இந்தக் கொள்கையில்தான் உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.

ஐதராபாத் கிரிக்கெட் சங்கச் செயலர் ஷ்ரேயாஸ் நாராயண், ’இந்த யோ-யோ விவகாரம் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. ஐபிஎல்-லில் அதிக ரன்களை எடுத்த வீரரை, திடீரென உடற்தகுதி பெறவில்லை என்று நிராகரிப்பது சரியானதுதானா?’ என்று ராயுடு நீக்கப்பட்டிருப்பது பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.

இப்படி யோ-யோவுக்கு எதிரானக் குரல்கள் உயர்ந்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அனிருத் சவுத்ரியும் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். 

(அனிருத் சவுத்ரி)

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகக் கமிட்டிக்கு அவர் அனுப்பியுள்ள 8 பக்க கடிதத்தில், ’தேசிய அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்ய, இந்த யோ-யோ உடல் தகுதித் தேர்வு முடிவை எடுத்தது யார்? எப்போது எடுக்கப்பட்டது? வீரர்களை இதை வைத்து ஏன் தேர்ந்தெடுக்க வேண்டு ம்?  அதற்கான அவசியம் என்ன? எதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தீர்கள்? இந்தந்த முடிவுகளின் அடிப்படையில்தான் வீரர்களைத் தேர்வு செய்யப்போகிறோம் என்று வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதா? அம்பத்தி ராயுடுவுக்கு இந்த டெஸ்ட் பற்றியும் அதை எப்படி நடத்துவார்கள் என்பது பற்றியும் முன்பே ஏன் சொல்லவில்லை?’ என்பது உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

’யோ யோ’ மூலம் வீரர்களிடம் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளரே இப்படி ஒரு கடிதத்தை எழுதியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close