[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

ஏமாற்றியது இந்திய ஏ அணி: இங்கிலாந்து லயன்ஸ் வெற்றி

nick-gubbins-hundred-highlights-batting-depth-against-misfiring-india-a

இந்திய ஏ அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அங்கு முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இந்தியா ஏ, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் பங்கேற்கும் இந்த முத்தரப்பு தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது. 

இங்கிலாந்தின் டெர்பியில் நடந்த இந்த முதல் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இந்திய ஏ அணி மோதியது. டாஸ் வென்ற இந்திய ஏ அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கியது.


பயிற்சி ஆட்டங்களில் கலக்கிய இந்திய ஏ அணி, இந்தப் போட்டியிலும் கலக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் தடுமாறியது. 46.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 42 ரன்களும் ரிஷப் பன்ட் 64 ரன்களும் சுப்மன் கில் 37 ரன்களும் எடுத்தனர். 

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி, 41.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் நிக் குப்பின்ஸ் அபாரமாக ஆடி 128 ரன்கள் குவித்தார். ஷாம் கெயின் 54 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டையும் அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close