[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்குகிறது சந்திரயான் விண்கலம். காலை ஒன்பதரை மணியளவில் நிலவை சுற்றத் தொடங்கும் என இஸ்ரோ தகவல்
  • BREAKING-NEWS முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

ஐபிஎல் தொடரில் மும்பை - ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை

today-ipl-2016-matches-srh-vs-mi-at-4-00-pm-and-kkr-vs-gl-at-8-00-pm-08-05-2016

ஐபிஎல் தொடரில் இன்று 2 ‌போட்டிகள் நடைபெறுகின்றன. விசாகப்பட்டினத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலி‌ல் முன்னேறும் முனைப்பில் இரண்டு அணிகளும் மோத உள்ளன.

இதையடுத்து கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லையன்ஸ் அணியும் மோத உள்ளன. அந்தப் போட்டி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை தக்க வைக்கும் முனைப்பில் நைட் ரைடர்ஸ் அணியும், முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் குஜராத் லையன்ஸ் அணி‌யும் களமிறங்க உள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close