[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

கோஹ்லி புதிய சாதனை: ஒரு ஐபிஎல் தொடரில் 2 சதம், 8 போட்டியில் 500 ரன்கள்!

virat-kohli-new-record-in-ipl-season

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராத் கோஹ்லி சதம் விளாசினார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் தொடரில் இரு முறை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற கோஹ்லி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பெங்களூர் அணி கோஹ்லியின் அதிரடி சத்தால் 19.3 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

நடப்பு தொடரில் 8 போட்டிகளிலேயே விளையாடி கோஹ்லி 500 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருவது ஓவர் போட்டிகளில் தொடர் ஒன்றில் 500 ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close