[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்

மீண்டும் ஒருநாள் அணியில் ‘சின்னதல’ ரெய்னா 

raina-to-replace-ambati-rayudu-in-india-s-odi-squad-for-series-against-england

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள்போட்டிக்கான யோ யோ டெஸ்டிலில் தோல்வி அடைந்த ராயுடுக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் 

அம்பத்தி ராயுடு (32) கடந்த பல வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் போராடி வருகிறார். கடைசியாக 2016-ம் ஆண்டு அணியில் விளையாடினார். அதன் பின்னர் அணியில் இடம் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடரில் அதுவரை மும்பை அணிக்காக விளையாடி வந்த அவர், 2018 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். முதல் போட்டியில் இருந்தே அதிரடியாக விளையாடிய ராயுடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியமானவராக இருந்தார். அவரது அதிரடியான பேட்டிங், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மொத்தம் 602 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 149.75 ஆக இருந்தது.


இதையடுத்து, இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஒரு நாள் போட்டிக்காக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த தொடரில் விளையாடும் வீரர்களுக்கான உடல் தகுதித் தேர்வு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்து வந்தது. இந்த உடல் தகுதித் தேர்வில் அம்பத்தி ராயுடு வெற்றி பெறவில்லை என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் யோ யோ டெஸ்டிலில் தோல்வி அடைந்த ராயுடுக்கு பதிலாக டி20 போட்டியில் இடம்பெற்றுள்ள அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close