[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

காபூல்ல விளையாடிய மாதிரியே இருந்தது: ஆப்கான் கேப்டன் நெகிழ்ச்சி!

it-felt-like-we-were-in-kabul-asghar-stanikzai

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடியது காபூலில் இருப்பதைப் போன்றே இருந்தது என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் கூறினார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 262 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. தவான் (107), முரளி விஜய் (105) ஆகியோர் சதமடித்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. 109 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த அந்த அணி, பாலோ ஆன் ஆனது. 2வது இன்னிங்ஸிலும் பேட்டிங் செய்த அந்த அணி 103 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை சந்தித்தது. 


இதன்மூலம் 5 நாள்கள் கொண்ட டெஸ்ட் போட்டி 2வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. முதல்முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது.பின்னர், பரிசளிப்பு விழாவில் வெற்றிக் கோப்பையை பெற்ற இந்திய அணி, ஆப்கான் நிர்வாகிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்களையும் அழைத்து கோப்பையுடன் புகைப்படம், வீடியோ எடுத்துக்கொண்டது. இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தோல்வி பற்றி ஆப்கான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஸாய் பேசும்போது, ‘இப்படியொரு வாய்ப்பைக் கொடுத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி. இதற்கு முன் டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. இதுதான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் என்பதால் நிறைய கற்றுக் கொண்டேன். இந்தியா போன்ற திறமையான அணியுடன் எப்படி விளையாட வேண்டும் என்று தெரிந்துகொண்டோம். நாங்கள் சிறந்த அணியாக இருந்தும் இரண்டே நாட்களில் போட்டி முடிந்தது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் என்பது முற்றிலும் வித்தியாசமானது. எங்கள் தவறுகளைத் திருத்துக்கொள்ள எங்களுக்கு நாட்கள் இருக்கிறது. அதோடு ரசிகர்களுக்கும் நன்றி. நாங்கள் காபூலில் இருப்பதைப் போன்றே உணர்ந்தோம்’ என்றார். 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close