[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை மறந்துவிட்டார்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

இன்று கோலாகலமாக தொடங்குகிறது 'கோல்' திருவிழா !

fifa-world-cup-begins-today-amidst-with-great-fan-flowing

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்குகிறது உலகக் கோப்பை காலபந்தாட்டப் போட்டிகள். தொடக்க விழாவுக்காக மாஸ்கோ நகரின் லூசினிக்கி விளையாட்டுத் திடல் மின்னொளியில் ஜொலித்து வருகிறது. பிரபல இசை மற்றும் நடனக் கலைஞர்கள் தொடக்க விழாவில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மாஸ்கோவில் குவிந்துள்ளனர். 

2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகளின் அணிகள் கலந்துக்கொள்கின்றன. இந்தப் போட்டிகள் இன்று தொடங்கி  ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மொத்தம் ரூ.87 ஆயிரம் கோடி செலவில் உலகக் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள், விளையாட்டு மைதான வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ரஷ்ய அரசு செய்துள்ளது.

உலகம் முழுவதும் இருந்து 1 கோடி ரசிகர்கள இதற்காக பயணம் மேற்கொள்வர் என கணிக்கப்பட்டுள்ளது.இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. கால்பந்து உலக்கோப்பை முதல் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதுகின்றன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close