[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...

ஆப்கான் டெஸ்ட்: இந்திய அணியில் யார் உள்ளே ? யார் வெளியே ?

what-will-be-probable-eleven-for-team-india-on-maiden-test-of-afghanistan

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை பெங்களூரிவில் தொடங்குகிறது. ஆப்கான் அணிக்கு டெஸ்ட் போட்டி அந்தஸ்தை ஐசிசி வழங்கியப் பின்பு, தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி. இதனையடுத்து இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என யூகங்களின் அடிப்படையில் தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய், ஷிகர் தவண், கே.எல்.ராகுல் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஆனால், அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் கணக்குப்படி முரளி விஜய்யும், ஷிகர் தவாணும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள். அதற்கடுத்தப்படியாக புஜாராவும், கோலியின் இடத்தில் ரஹானேவும், அதற்கடுத்து கருண் நாயரும், தினேஷ் கார்த்திக்கும் களமிறக்கப்படுவார்கள். அதன் பின்பு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவும் களமிறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

இதன் பின்பு பவுலர்கள் வரிசையை பார்க்கலாம் சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் இந்த மூவரில் யாரேனும் இருவர் அணியில் இடம் பெறுவார்கள். வேகப்பந்து வீச்சாளர்களில் அனுபவம் வாய்ந்த இஷாந்த் சர்மா, ஷர்துல் தாக்குர், அறிமுக வீரர் சைனி, உமேஷ் யாதவ் நால்வரில் மூன்று பேருக்கோ அல்லது இரண்டு பேருக்கோ வாய்ப்பு அளிக்கப்படலாம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு போட்டி மட்டும்தான் என்பதால் புது முகங்களுக்கான வாய்ப்பு அதிகமிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close