[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கபினி அணையில் இருந்து நீர் திறப்பு 15,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைப்பு
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் மாநாடு தொடங்கியது
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை
  • BREAKING-NEWS ருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
  • BREAKING-NEWS சேலம் 8 வழி சாலைத்திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது
  • BREAKING-NEWS வேலூர்: வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில் மலையில் மினிலாரி கவிழ்ந்த விபத்தில் பலி 9 ஆனது
  • BREAKING-NEWS பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

இது தினேஷ் கார்த்திக் 'வெர்ஷன்' 2.o

after-8-years-in-the-wilderness-dinesh-karthik-has-a-chance-to-make-his-mark-in-tests-yet-again

ஏறக்குறைய 8 ஆண்டுகள் காத்திருப்பு, அணிக்கு உள்ளேயும் வெளியேயுமான ஆடுபுலி ஆட்டம் இப்போதும் அதே நிலைதான் ஆனால் தொடர்ந்து போராடுகிறார் தினேஷ் கார்த்திக். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக 8 ஆண்டுகளுக்கு பின்பு களமிறங்குகிறார். ஆனால், முன்பு இருந்த தினேஷ் கார்த்திக் இ்பபோது இல்லை. டெஸ்ட் போட்டியில் நிதானமாக ஆடுவார், ஒரு நாள் போட்டியில் சீராக ரன் சேகரிப்பார் மற்றும் டி20 போட்டியில் அசரடிக்கும் அதிரடியை காட்டுவார்.

எனவே இப்போதுள்ள தினேஷ் கார்த்திக் மீதான எதிர்பார்ப்பு அதிரிப்புதிரியாக எகிறிக்கிடக்கிறது. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்பு, தோனி ஓய்வுப் பெறுவார் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்திய அணிக்காக இன்னும் சில காலங்களுக்கு தினேஷ் கார்த்திக் விளையாடுவார் என தெரிகிறது. கடைசியாக தினேஷ் கார்த்திக் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார், அதில் அவர் எடுத்தது 27 ரன்கள்.

தோனிக்கு சீனியர்

இந்திய அணியில் தோனி இடம் பிடிப்பதற்கு முன்பே அணியில் இடம்பிடித்தவர் தினேஷ் கார்த்திக். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தனது 19 வயதில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் 2004 ஆண்டு களமிறக்கப்பட்டார்.இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பரான நயன் மோங்கியா ஓய்வு பெற்றதும், தலைசிறந்த விக்கெட் கீப்பர் இந்திய அணிக்கு கிடைக்காமல் இருந்தனர்.

மோங்கியாவுக்கு பின்பு சபா கரீம், சமீர் திகே, தீப்தாஸ் குப்தா, அஜய் ராத்ரா, பிரசாத் பின்பு ராகுல் திராவிட்டும் கீப்பிங் செய்தார். பின்பு, இடது கை பேட்ஸ்மேன் ஆன பார்தீவ் பட்டேல் 2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்காம் டெஸ்டில் அறிமுகமானார். அப்போது அவருக்கு 17 வயதுதான். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன்பின் தினேஷ் கார்த்திக் 2004-ம் ஆண்டு மும்பையின் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் களம் இறங்கினார். ஆனால் ஒரு சில போட்டிகளை தவிர மற்றப் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனாலும் முந்தைய விக்கெட் கீப்பர்களுக்கு தினேஷ் கார்த்திக் எவ்வளவோ தேவலை என டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம் பிடித்தார். ஆனால் டோனி முதன்முறையாக 2004 ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 2004-ம் ஆண்டு  வங்கதேசம் அணிக்கு எதிராக டக் அவுட். ஆனால் 2005 இல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோனி சதமடித்தார், பின்பு நடந்தது எல்லாம் சரித்திரம். 

இதனால் தினேஷ் காரத்திக்கு வாய்ப்பு வராமலேயே ஆண்டுகள் கடந்துவிட்டது. 19 வயதில் அறிமுகமான தினேஷ் கார்த்திக்கு இப்போது வயது 33. திறமைக்கு வயது தடையில்லை, ஆனால் இப்போதும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாஹாதான். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயத்தினால், தினேஷ் கார்த்திக் அணியில் மாற்றாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், தினேஷ் கார்த்திக் இனி நிலையாக அணியில் இடம் பிடிப்பார் என  ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close