[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

மின்னல் தாக்கி இளம் கிரிக்கெட் வீரர் பலி!

aspiring-cricketer-loses-his-life-after-lightning-strikes-him

மின்னல் தாக்கியதில் இளம் கிரிக்கெட் வீரர் மைதானத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள செரம்போரைச் சேர்ந்தவர் தேபாப்ரதா பால். 21 வயது கிரிக்கெட் வீரரான இவர், ஆல்ரவுண்டர். இவர் கிரிக்கெட் திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள தெற்கு கொல்கத்தாவில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பயங்கர இடி சத்தம் கேட்டது. திடீரென்று மின்னலும் வெட்டியது. அடுத்த சில நிமிடத்தில் பால் திடீரென கீழே விழுந்து மயங்கினார். அவர் மின்னல் தாக்கியதால் விழுந்தார் என்பது தெரிய வந்தது.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இத்தகவலை கிளப்பின் செயலாளர் அப்துல் மசூத் தெரிவித்துள்ளார். இளம் வீரர் மின்னல்தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close