[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்

வெஸ்ட் இண்டீஸ் வீரர் டோவ்ரிச் அபார சதம்: இலங்கை திணறல்!

dowrich-ton-fiery-pacers-give-west-indies-the-advantage

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷேன் டோவ்ரிச் அபார சதம் அடித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நேற்று முன் தினம் தொடங்கியது. 

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் முடிவில் அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது இளம் வீரர் ஷேன் டோவ்ரிச் 45 ரன்களுடனும் பிஷூ ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. டோவ்ரிச் அபாரமாக ஆடி, சதம் அடித்தார். அவர் 125 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் எடுத்திருந்த போது, டிக்ளேர் செய்யப்பட்டது. இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டு களையும் லக்மல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க விக்கெட்டுகளை எளிதாக இழந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close