[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன

தோனி சாதித்துவிட்டார்! ரெய்னா சாதிப்பாரா? வினோதமான ரசிகர்கள் எதிர்பார்ப்பு 

today-2018-ipl-final-cskvsrh

11-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் 11-ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரு அணிகளுமே சமபலம் பொருந்தியவை என்பதால் கோப்பையை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள சென்னை அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதேபோல் 2016-ம் ஆண்டு கோப்பையை கையில் ஏந்திய ஹைதராபாத் அணி, இரண்டாவது முறையாக வென்று முத்திரை பதிக்க காத்திருக்கிறது. சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் அசத்தி வந்தாலும், பந்துவீச்சில் கடைசி கட்டத்தில் ரன்களை விட்டு கொடுப்பது சென்னை அணியின் பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.  ஹைதராபாத் அணி அப்படியே எதிர்மறையாக விளங்குகிறது. பந்து வீச்சில் ரஷீத்கான், சித்தார்த் கவூல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் கலக்கி வருகின்றனர். ஆனாலும் கூட பேட்டிங்கில் நடுவரிசை வீரர்கள் பெரிய அளவில் இதுவரை சோபிக்காதது அந்த அணிக்கு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.

மிக முக்கிய போட்டியான இன்று சென்னை அணி வென்றால் பல்வேறு சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ரெய்னா இன்னும் 47 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் எடுக்கும் முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். அதேபோல் கேப்டன் தோனி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் டி20 போட்டியில் கேப்டனாக அவர் பெரும் 150 வெற்றியாகும். அதுமட்டுமின்றி சென்னை அணி இந்த சீசனில் ஹைதராபாத் அணியை மூன்று முறை சந்தித்துள்ளது. தான் சந்தித்த மூன்று போட்டியிலும் ஹைதராபாத் அணியை வென்றுள்ள சென்னை, இன்றைய போட்டியில் வெற்றிப்பெறும் பட்சத்தில் இந்த தொடரில் ஒரு அணியை தொடர்ந்து நான்கு முறை வென்ற அணி என்ற சிறப்பு என பல்வேறு சாதனைகள் சென்னைக்கு காத்திருகின்றன. 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் சுவாரசியமான தகவல் ஒன்றை பரப்பிவருகின்றனர். சென்னை அணியின் கேப்டன் தோனியின் ஜெர்சி நம்பர் 7. துணைக் கேப்டன் ரெய்னாவின் ஜெர்சி நம்பர் 3. சென்னை அணி 2018 ஐபிஎல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதின் மூலம் ஏழாவது முறையாக  ஃபைனலுக்கு முன்னேறிய அணி என்ற சிறப்பு பெற்றுள்ளது. 7யை ராசியான நம்பராக கொண்ட தோனி 7முறை சென்னையை ஃபைனலுக்கு கொண்டு சென்றிருக்கிறார் என பாராட்டி வருகின்றனர். அதேபோல் எற்கெனவே 2010, 2011 பட்டத்தை வென்றுள்ள சென்னை அணி இந்தமுறை வென்றால் மூன்றாவது முறையாக கோப்பை வெல்லும். இதையும் ரெய்னாவின் ஜெர்சி நம்பரான 3 உடன் ஒப்பிட்டு ரசிகர்கள் சுவாரசியமாக பேசிவருகின்றனர்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close